திருத்துறைப்பூண்டி: கை துப்பாக்கியுடன் 7 பேர் கைது, 2 கார்கள் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி: கை துப்பாக்கியுடன் 7 பேர் கைது, 2 கார்கள் பறிமுதல்
Updated on: 
1 min read

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நேற்று இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, 2 சொகுசு கார்களில் கை துப்பாக்கியுடன் வந்த 7 பேரை கைது செய்தனர். மேலும், இரண்டு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி போலீஸார் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் அவ்வழியாக வந்த இரண்டு ஸ்கார்பியோ கார்களை வழிமறித்து, சோதனை செய்தனர்.

அந்தக் கார்களில் இருந்தவர்கள் ரவுடி பட்டியலிலும், கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அம்மு என்கின்ற பசுபதி (26), தூத்துக்குடி மாவட்டம் கண்ணன் (22), ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீதர் (22), கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஹரிஹரன் (33) ஆகியோரும் இவர்களுடன் திருத்துறைப்பூண்டி அருகே தெற்கு பாமணியை சேர்ந்த ஹரிஷ் என்கின்ற அன்புராஜ் (21), யோகேஷ் (21) திருத்துறைப்பூண்டி அபிஷேக கட்டளை சிவபாலன் (26) ஆகிய 7 பேர் அந்த காரில் இருந்தனர்.

மேலும் அந்த காரை சோதனை செய்த போது கை துப்பாக்கி ஒன்றும் இரண்டு தோட்டாக்கள் இருந்தன. உடனடியாக இவர்கள் அனைவரையும் கைதுசெய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார், அவர்கள் வைத்திருந்த கை துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள், பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்கள் மற்றும் 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் எஸ்பி சதீஷ்குமார் நேரடியாக 7 சந்தேக நபர்களையும் விசாரித்தார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் எதற்காக கை துப்பாக்கியுடன் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகள் முகாமிட்டுள்ளனர் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி: கை துப்பாக்கியுடன் 7 பேர் கைது, 2 கார்கள் பறிமுதல்
“திறந்து வைப்பது அல்ல; எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே உண்மையான பெருமை” - மு.க.ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in