Published : 05 Oct 2019 08:01 AM
Last Updated : 05 Oct 2019 08:01 AM

புதுக்கோட்டையில் பிடிபட்ட வடமாநில இளைஞர்களுக்கு நகைக்கடை கொள்ளை முயற்சி வழக்கில் தொடர்பு: திருப்பூர் போலீஸார் விசாரணையை தொடங்கினர்

திருச்சி

திருச்சி மாவட்ட தனிப்படை போலீ ஸாரால் புதுக்கோட்டையில் பிடிக் கப்பட்ட வடமாநில இளைஞர் களுக்கு காங்கேயம் நகைக்கடை கொள்ளை முயற்சி வழக்கில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் போலீஸார் திருச்சிக்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை தொடர்பாக திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட் டங்களிலும் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த வட மாநில இளைஞர்களை பிடிக்க முயற்சித்தனர்.

அப்போது, போலீஸாரிட மிருந்து தப்புவதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் சகட்சங் பகுதியைச் சேர்ந்த அப்துல் சேக்(40) என்ப வர் கட்டிடத்திலிருந்து கீழே குதித் தார். அவருடன் தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலம் தக்ஷினி சன்ப்கன்ஞ் பகுதியைச் சேர்ந்த ஜியாவுல் சேக்(35), சபிகுல் சேக் (29), முகமது காலிக்(45), சமீர் (30), மலாடா கதல்பரி பகுதியைச் சேர்ந்த எஸ்.கே.நஜ்ருல்(42) ஆகிய 5 பேரையும் மடக்கிப் பிடித்தனர். கீழே குதித்தபோது அப்துல் சேக் தலையில் காயம் ஏற்பட்டதால், அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிக்கியது எப்படி?

பிடிபட்ட நபர்களுக்கு லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், 5 பேரையும் திருச்சி கே.கே.நகரி லுள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு அழைத்து வந்து, திருச்சி மாநகர போலீஸார் விசாரித்தனர். அதில், லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் தொடர்பு இல்லை என தெரியவந்தது.

எனவே, பிடிபட்டவர்கள் குறித்த விவரங்களை, அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் அனுப்பி வைத்து அவர்கள் மீது வழக்குகள் உள்ள னவா என விசாரித்தனர். திருச்சி நெ.1 டோல்கேட்டில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பஞ்சாப் நேஷ னல் வங்கிக் கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் எனக்கருதி மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக் மற்றும் தனிப்படை போலீஸார் அவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் கடந்த செப்.25-ம் தேதி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தாக தெரியவந்தது. எனவே, இது குறித்த விவரங்களை திருப்பூர் போலீஸாருக்கு தெரியப்படுத்தி னர். அதன்பேரில் திருப்பூர் போலீ ஸார் நேற்று மாலை திருச்சிக்கு வந்து வடமாநில இளைஞர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனிப்படை போலீ ஸார் கூறும்போது, “திருப்பூரில் தங்கியிருந்து காங்கேயத்திலுள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளை யடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது இவர்களின் முயற்சி தோல்வியடைந்தது.

போலீஸுக்கு பயந்து இடம்மாறினர்

எனினும், இதுகுறித்து போலீ ஸார் விசாரிக்கும்போது “திருப் பூரில் இருந்தால் சிக்கிக் கொள் வோம் என்பதால், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு இடம் மாறி யுள்ளனர். அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்து, கொள்ளை நோக்கத்தில் நகைக்கடை மற்றும் வங்கிகளை கண்காணித்து வந்திருக்கலாம் என சந்தேகிக் கிறோம். இவர்களில் அப்துல் ஷேக் மீது தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. காங்கேயம் கொள்ளை முயற்சி வழக்கில் இவர்களின் பங்கு உறுதி செய்யப்பட்டதால், திருப்பூர் போலீஸார் இவர்களிடம் தொடர்ந்து விசாரிப்பார்கள்” என்றனர்.

துப்புகொடுத்த ‘வாட்ஸ்அப்’ குழு

கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீஸார் கூறும்போது, “தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களிலும், பிற மாநிலத்தவர் தமிழ்நாட்டிலும் கொள்ளையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. எனவே, இதுகுறித்த விவரங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் பல்வேறு மாநிலங்களிலுள்ள காவல் துறையின் தனிப்படை மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட வாட்ஸ்அப் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகளை வெளியிட்டு, இதுபோன்று குற்ற செயல்முறை (எம்.ஓ) கொண்டவர்கள் இருந்தால் தெரியப்படுத்துமாறு பதிவிடப்பட்டிருந்தது. இதைக்கண்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர், ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த அப்துல் ஷேக்கின் செல்போன் எண்ணை பதிவிட்டு, அவர் குறித்து விசாரிக்குமாறு தெரிவித்தார். அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது புதுக்கோட்டையில் இருப்பதாகக் காட்டியது. சந்தேகம் வலுத்ததால், திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார் அங்குசென்று சோதனை நடத்தி வட மாநிலத்தவர்களை பிடித்து, திருச்சி மாநகர போலீஸாரிடம் ஒப்படைத்தனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x