சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்: 4 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.36 கோடி மதிப்புள்ள 940 கிராம் தங்கம், ரூ.2.73 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம்.

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.36 கோடி மதிப்புள்ள 940 கிராம் தங்கம், ரூ.2.73 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம்.

Updated on
1 min read

சென்னை: விமான நிலை​யத்​தில் ரூ.4.09 கோடி மதிப்​புள்ள தங்​கம், வெளி​நாட்டு பணம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இளைஞர், இளம் பெண் உட்பட 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

துபாயி​லிருந்து விமானம் சென்​னைக்கு நேற்று அதி​காலை வந்​தது. அந்த விமானத்​தில் வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் சுங்​கத் துறை அதி​காரி​கள் சோதனை செய்து அனுப்​பிக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது சென்​னையை சேர்ந்த 28 வயது இளைஞர் வந்​தார். சுற்​றுலா விசா​வில் துபாய் சென்​று​விட்டு வந்த அவர் மீது அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது.

அவரை தனி அறைக்கு அழைத்​துச் சென்று அதி​காரி​கள் சோதனை செய்​த​போது, அவர் உள்​ளாடைக்​குள் ரூ.1.36 கோடி மதிப்​புள்ள 940 கிராம் தங்​கம் மறைத்து வைத்​திருந்​தது கண்​டறியப்​பட்​டது.

இதையடுத்​து, தங்​கத்தை பறி​முதல் செய்த அதி​காரி​கள் அவரை கைது செய்து விசா​ரணை நடத்​தி​ய​தில், அவர் தங்​கக் கடத்​தலுக்கு குரு​வி​யாக செயல்​பட்​டது தெரிய​வந்​தது.

அவர் கொடுத்த தகவலின்​படி, தங்​கத்தை வாங்​கிச் செல்​வதற்​காக, சென்னை விமான நிலை​யத்​துக்கு வெளிப்​பகு​தி​யில் காத்​திருந்த 2 பேரை அதி​காரி​கள் கைது செய்​தனர்.

ரூ.2.73 கோடி பணம்: அதே​போல், நேற்று முன்​தினம் இரவு சென்​னையி​லிருந்து துபாய் செல்ல வந்த சென்​னையை சேர்ந்த 30 வயது பெண்​ணிடம் இருந்து ரூ.2.73 கோடி (இந்​திய ரூபாய் மதிப்​பு) அமெரிக்க டாலர், யூரோ கரன்​சிகளை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். அந்த பெண்ணை அதி​காரி​கள் கைது செய்து வி​சா​ரணை நடத்​தி​ய​தில், அவர் கடத்​தல் குரு​வி​யாக செயல்​பட்​டது தெரிய​வந்​தது.

<div class="paragraphs"><p>சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.36 கோடி மதிப்புள்ள 940 கிராம் தங்கம், ரூ.2.73 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம்.</p></div>
அண்ணன் மகளுக்கு பாலியல் வன்கொடுமை: சித்தப்பாவுக்கு 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in