மதுரை: பிரபல நகைக் கடையில் 35 கிலோ நகைகள் கொள்ளை

மதுரை: பிரபல நகைக் கடையில் 35 கிலோ நகைகள் கொள்ளை
Updated on: 
1 min read

மதுரை: மதுரையில் பிரபல நகைக் கடை ஒன்றில் 35 கிலோ நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மதுரை பைபாஸ் சாலையில் நேரு நகர் செல்லும் வழியில் தனிஷ்க் ஜுவல்லரி ஷோரூம் செயல்பட்டு வருகிறது. 3 மாடிகளை கொண்ட இந்தக் கடையானது கடந்த 14-ம் தேதி திறக்கப்பட்டது. முதல் தளத்தில் தங்க நகை, டைமண்ட் நகை விற்பனை நடக்கிறது.

நேற்று கடை அடைக்கப்பட்டு இன்று காலை வழக்கம் போல திறக்கப்பட்டது. அப்போது, கடையின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கடையிலிருந்த நகை பொருள்கள் திருடுபோய் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் பின்பக்கம் வாயிலாக கடைக்குள் புகுந்து கடையில் இருந்த ரூ.40 கோடி மதிப்பில் 500 பவுன் நகை பொருட்களைத் திருடி சென்றுள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன், வனிதா உள்ளிட்டோர் அடங்கிய போலீஸார் பல்வேறு கட்டங்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் வாயிலாகவும் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், “கடையில் 3 நபர்கள் சுவர் மற்றும் கதவை உடைத்து கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். கடையில் இருந்த பொருட்களில் 30 சதவீத பொருட்கள் திருடு போயுள்ளது. திருடு போன நகைகளின் மதிப்பு எவ்வளவு என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

மதுரை: பிரபல நகைக் கடையில் 35 கிலோ நகைகள் கொள்ளை
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி டிஐஜி விசாரணை

X