

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு மாயமான சிறுமி வழக்கில் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் விசாரணை நடத்தினார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த அக்டோபர் 11-ம் தேதி பிறந்த நாளை கொண்டாடிவிட்டு பெற்றோருடன் உறங்கினார்.
பின்னர் மறுநாள் காலை 3 மணி அளவில் சிறுமியை காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
எஸ்பி மதிவாணன் மேற்பார்வையில் 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டது. 10 நாட்களாகி யும் விசாரணையில் முன்னேற் றம் ஏற்படாததால், சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
எஸ்பி ஜவகர் தலைமையில் சிபிசிஐடி போலீஸார் கடந்த 20 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். புவனகிரி, நாமக்கல் பகுதியில் சிறுமியின் சாயலில் ஒருவர் நடமாடியாக கிடைக்க தகவலின் பேரில் இரு ஊர்களிலும் சிபிசிஐடி போலீஸார் தேடியும் பலனில்லை.
சிறுமி மாயமாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் சிபிசிஐடி போலீஸாரும் தேடியும் பலன் இல்லை. மேலும் சந்தேகத்தின் பேரில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை பிடித்து விசாரித்தும் வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் நேற்று நேரில் விசாரணை நடத்தினார். சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியவர், சிறுமியை விரைவாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர்களிடம் சிறுமி குறித்த தகவல்களை கேட்டறிந்தார். இதையடுத்து கிராம மக்களிடமும் விசாரணை நடத்தினார். மேலும் சிறுமியின் வீட்டைச் சுற்றியுள்ள வனப் பகுதிகள், விவசாய நிலங்களை பார்வையிட்டார். அப்போது எஸ்பி ஜவகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வழக்கு தொடர்பாக டிஐஜி ஆலோசனை நடத்தினார். செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு மாயமான சிறுமி வழக்கில் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் விசாரணை நடத்தினார்.