தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட பாம்பு உள்ளிட்ட 31 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட பாம்பு உள்ளிட்ட 31 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்
Updated on
1 min read

சென்னை: தாய்​லாந்​தில் இருந்து சென்​னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்​பட்ட பாம்பு உள்​ளிட்ட 31 அரிய வகை உயி​ரினங்​களை, சென்னை விமான நிலைய சுங்​கத்​துறை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

தாய்​லாந்து தலைநகர் பாங்​காக்​கில் இருந்​து, நேற்​று​முன்​தினம் நள்​ளிரவு சென்னை வந்த விமானத்​தில் இருந்த பயணி​களை சுங்​கத் துறை அதி​காரி​கள் தீவிர​மாகக் கண்​காணித்​தனர்.

குறிப்​பாக, சுற்​றுலா விசா​வில் சென்​று​விட்டு உடனடி​யாகத் திரும்​பும் பயணி​களை தீவிர​மாக கண்​காணித்​தனர். அந்த வகை​யில், சென்​னையைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒரு​வரின் நடவடிக்​கை​களில் சந்​தேகமடைந்த அதி​காரி​கள், அவரை மடக்கி விசா​ரித்​தனர். அவர் முன்​னுக்​குப்​பின் முரணாகப் பேசி​ய​தால், அவரது பெரிய சூட்​கேஸைத் திறந்து சோதனை​யிட்​டனர்.

அப்​போது, சூட்​கேஸுக்​குள் உயி​ரினங்​கள் சுவாசிப்​ப​தற்​காகச் சிறிய துளை​கள் இடப்​பட்​டிருப்​ப​தைக் கண்டு அதி​காரிகள் அதிர்ச்​சி​யடைந்​தனர். உள்ளே பார்த்​த​போது, பல்​வேறு நாடு​களைச் சேர்ந்த அரிய வகை பாம்புகள், ஆமைகள் மற்​றும் பல்​லிகள் உயிருடன் ஊர்ந்து கொண்​டிருந்​தது தெரிந்​தது.

குறிப்​பாக, ஆப்​பிரிக்கா மற்​றும் சகாரா பகு​தி​களில் வசிக்​கும் அபூர்வ வகை சல்​கட்டா ஆமை​கள் 9, தென் அமெரிக்கா மற்​றும் கரீபியன் தீவு​களை சேர்ந்த அரிய வகை பல்​லிகள் 4, கிழக்கு ஆஸ்​திரேலி​யாவை சேர்ந்த ஈஸ்​டர்ன் வாட்​டர் டிராகன் ஒன்​று, ஆப்​பிரிக்​காவை தாயக​மாகக் கொண்ட விஷமற்ற ராயல் பைத்​தான் மலைப் பாம்புகள் 12, கருப்பு நிற​மும் சிவப்பு கண்​களும் கொண்ட ஆப்​பிரிக்க இன அல்​பைனோ கார்ன் பாம்பு ஒன்​று, ஆஸ்​திரேலிய இனத்தை சேர்ந்த நீல நாக்கு உடும்​பு​கள் 3, வெள்ளை நிற அரச நாகம் என்று அழைக்​கப்​படும் கொடிய விஷம் வாய்ந்த ஒயிட்​சைட் கிங் பாம்பு ஒன்று என உலக அளவில் அழிந்து வரும் நிலை​யில் உள்ள 31 அரிய வகை உயி​ரினங்​கள் இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, அந்த இளைஞரை கைது செய்து அதி​காரி​கள் நடத்​திய விசா​ரணை​யில், ‘ஆடம்பர பங்​களாக்​களில் வசிப்​பவர்​கள் இவற்​றைச் செல்​லப் பிராணி​களாக வளர்ப்​ப​தற்​கும், வாஸ்து சாஸ்​திரத்​தின்​படி வீட்​டில் வைத்​தால் செல்​வம் பெரு​கும் என்ற நம்​பிக்​கை​யிலும் பல லட்​சங்​கள் கொடுத்து வாங்​கு​கின்​றனர். இதற்​காகவே இந்த உயி​ரினங்​கள் கடத்தி வரப்​பட்​டுள்​ளன’ என்​பது தெரிய​வந்​தது.

இதைத் தொடர்ந்​து, வெளி​நாட்டு உயி​ரினங்​கள் மூலம் புதிய வகை வைரஸ்​கள் அல்​லது நோய்க்​கிரு​மிகள் பரவும் அபா​யம் இருப்​ப​தால், மத்​திய சுகா​தா​ரத் துறை​யின் ஆலோ​சனை​யின்​படி, இவை அனைத்​தும் வந்த விமானத்​திலேயே மீண்​டும் தாய்​லாந்​துக்​குத் திருப்பி அனுப்​பப்​பட்​டன.

இதையடுத்​து, கைது செய்​யப்​பட்ட இளைஞர் மீது சுங்​கச் சட்​டம் மற்​றும் வனவிலங்கு பாது​காப்​புச் சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இவரை ‘கடத்​தல் குரு​வி’​யாகப் பயன்​படுத்​தி, பின்​னணி​யில் இருந்து இயக்​கிய முக்​கிய குற்​ற​வாளியைத் தேடும் பணி​யில் சுங்​கத்​துறை மற்​றும்​ வனத்​துறை அதி​காரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட பாம்பு உள்ளிட்ட 31 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்
கோரிக்கைகளை வலியுறுத்தி கருணாநிதி படத்துடன் பேரணியாக சென்ற மருத்துவர்கள் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in