கிரெடிட் கார்டு, ஆன்லைன் வர்த்தகம் பெயரில் ரூ.30 லட்சம் மோசடி: மேற்கு வங்கம், ராஜஸ்தானில் பதுங்கிய 2 பேர் கைது

சென்னை சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை
அபுல் உசேன் ஷேக், ராஜேந்திர குமார் மீனா

அபுல் உசேன் ஷேக், ராஜேந்திர குமார் மீனா

Updated on: 
2 min read

சென்னை: பிரீமி​யம் கிரெடிட் கார்டு பெற்​றுத் தரு​வ​தாக கூறி​யும், ஆன்​லைன் வர்த்​தகத்​தில் லாபம் கிடைக்​கும் என ஆசை காட்​டி​யும் சென்​னை​யில் 2 பேரிடம் ரூ.30 லட்​சம் மோசடி செய்த வெளி மாநில இளைஞர்​களை சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை நுங்​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்த கீர்த்​தி​வாசன் (34) என்​பவரை கடந்த ஏப்​.23-ம் தேதி செல்​போனில் தொடர்பு கொண்ட ஒரு​வர், கிரெடிட் ஸ்கோர் அடிப்​படை​யில் பல்​வேறு சலுகைகளு​டன் கூடிய பிரபல வங்​கி​யின் பிரீமி​யம் கிரெடிட் கார்டு பெற்​றுத் தரு​வ​தாக கூறி​யுள்​ளார்.

வாட்​ஸ்​அப் மூலம் ஒரு லிங்க்​கை​யும் அனுப்​பிய அவர், வங்​கிக் கணக்கு உள்​ளிட்ட விவரங்​களை பதிவு செய்​தால் விரை​வில் பிரீமி​யம் கிரெடிட் கார்டு கிடைக்​கும் என்று கூறி​யுள்​ளார். கீர்த்​தி​வாசனும் தனது வங்கி மற்​றும் தனிப்​பட்ட விவரங்​களை அதில் பதிவு செய்​துள்​ளார்.

மறு​நாள் புதிய செல்​போன் ஒன்றை அனுப்பி வைத்த நபர், 2-வது கட்ட சரி​பார்ப்​புக்​காக அதில் அவரது சிம் கார்டை பொருத்​து​மாறு கூறி​யுள்​ளார்.

அதன்​படி, அந்த செல்​போனில் சிம் கார்டை கீர்த்​தி​வாசன் பொருத்​திய சிறிது நேரத்​திலேயே, அவரது வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.10 லட்​சம், கிரெடிட் கார்டு மூலம் ரூ.7.60 லட்​சம் என மொத்​தம் ரூ.17.60 லட்​சம் அபகரிக்​கப்​பட்​டது தெரிய​வந்​தது.

இதுகுறித்து தேசிய சைபர் க்ரைம் புகார் இணை​யதளம் மற்​றும் சென்னை பெருநகர காவல் துறை​யின் கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீ​ஸில் கீர்த்​தி​வாசன் புகார் செய்​தார்.

இதன்​பேரில், கிழக்கு மண்டல சைபர் க்ரைம் ஆய்​வாளர் தலை​மையி​லான தனிப்​படை​யினர், வங்​கிக் கணக்கு விவரங்​கள் மற்​றும் செல்​போன் எண்​களை ஆய்வு செய்து விசா​ரணை நடத்​தினர்.

இதில், மோசடி​யில் ஈடு​பட்ட நபர் மேற்கு வங்க மாநிலத்​தில் பதுங்கி இருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, மேற்கு வங்​கம் விரைந்த தனிப்​படை​யினர், அங்​குள்ள போலீ​ஸாரின் உதவி​யுடன் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டு, முர்​ஷி​தா​பாத் மாவட்​டம் நவ்தா பகு​தி​யைச் சேர்ந்த அபுல உசேன் ஷேக் (26) என்​பவரை கடந்த 6-ம் தேதி கைது செய்​தனர்.

ஜப்​பான் நிறு​வனம் என மோசடி

திரு​வல்​லிக்​கேணி​யைச் சேர்ந்​தவர் ஜெக​நாதன் பாலாஜி (54). இவர் கடந்த மே 28-ம் தேதி மின்​சார வாக​னங்​களுக்​கான சார்​ஜிங் நிலை​யம் தொடர்​பான வர்த்தக வாய்ப்​பு​கள் குறித்து இணை​யதளத்​தில் தேடிக்​கொண்​டிருந்​தார்.

அப்​போது இணை​யதளத்​தில் கிடைத்த ஒரு வணிக நிறு​வனத்​தின் செல்​போன் எண்ணை தொடர்பு கொண்​டார். எதிர்​முனை​யில் பேசி​ய​வர்​கள் தாங்​கள் ஜப்​பான் நிறு​வனத்​தைச் சேர்ந்​தவர்​கள் என அறி​முகப்​படுத்​திக் கொண்​டனர்.

குறிப்​பிட்ட இணை​யதளத்​தில் இணைந்து வர்த்​தகத்தை தொடங்​கி​னால் அதிக லாபம் சம்​பா​திக்​கலாம் என்று ஆசை வார்த்தை கூறினர். வர்த்​தகத்​தில் ஈடு​படு​வதற்கு முன்பு ஆன்​லைன் மூலம் பயிற்சி அளிப்​ப​தாக​வும் தெரி​வித்​தனர்.

இதை நம்​பிய ஜெக​நாதன் பாலாஜி, அவர்​கள் கூறிய வங்​கிக் கணக்​குக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 4 தவணை​களாக மொத்​தம் ரூ.13 லட்​சம் அனுப்​பி​யுள்​ளார்.

ஆரம்​பத்​தில் சிறிய தொகையை லாப​மாக வழங்கி நம்​பிக்​கையை ஏற்​படுத்​திய மர்ம நபர்​கள், திடீரென அவருட​னான தொடர்பை துண்​டித்​தனர். வர்த்​தகத்​துக்​காக பயன்​படுத்​தப்​பட்ட இணை​யதளத்​தை​யும் முடக்​கினர்.

புகாரின்​பேரில், சென்னை காவல் துறை​யின் கிழக்கு மண்டல சைபர் க்ரைம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். மோசடிக்கு பயன்​படுத்​தப்​பட்ட வங்​கிக் கணக்கு விவரங்​கள், செல்​போன் எண்​களை தீவிர​மாக ஆய்வு செய்​தனர்.

இதில், மோசடி​யில் ஈடு​பட்ட நபர் ராஜஸ்​தானில் பதுங்கி இருப்​பது தெரிய​வந்​தது. அங்கு விரைந்த தனிப்​படை​யினர், அங்​குள்ள ராம்​பச்​வாரா போலீ​ஸாரின் உதவி​யுடன் கண்​காணித்​து, தவுசா மாவட்​டம் ஹேம்​லி​வாலா பகு​தி​யைச் சேர்ந்த ராஜேந்​திர குமார் மீனா (35) என்​பவரை கடந்த 4-ம் தேதி கைது செய்​தனர்.

அவரிடம் இருந்து ஐபோன் உட்பட 2 செல்​போன்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இரு​வரை​யும் சென்​னைக்கு அழைத்து வந்த போலீ​ஸார், நீதி​மன்​றத்​தில்​ ஆஜர்​படுத்​தி புழல்​ சிறை​யில்​ அடைத்​தனர்​.

<div class="paragraphs"><p>அபுல் உசேன் ஷேக், ராஜேந்திர குமார் மீனா</p></div>
விமான நிலையத்தில் ரூ.2.30 கோடி தங்கம் பறிமுதல்: வடமாநில நபர் கைது

X