மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ், சாகசம்: சென்னையில் 2,000 பைக்குகள் பறிமுதல்

போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை
மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ், சாகசம்: சென்னையில் 2,000 பைக்குகள் பறிமுதல்
Updated on: 
1 min read

சென்னை: சென்​னை​யின் முக்​கிய சாலைகளில் இரவு நேரங்களில் பைக்ரேஸ் மற்​றும் ஆபத்​தான சாகசங்​களில் ஈடுபடும் இளைஞர்​களால் பொது​மக்​கள் அச்​சமடைந்து வருகின்றனர். இதைக் கட்​டுப்​படுத்த போக்​கு​வரத்து போலீ​ஸார் நடத்​திய அதிரடி வாகன சோதனை​யில் கடந்த 3 நாட்​களில் 2 ஆயிரம் பைக்​கு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

அண்​ணா​சாலை, கிழக்கு கடற்​கரைச் சாலை, பூந்​தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காம​ராஜர் சாலை உள்பட பல முக்​கிய சாலைகளில் இரவு நேரங்​களில் இளைஞர்​கள் சிலர் அதிவேக​மாக பைக்​கு​களை ஓட்​டிச் சென்று ரேசில் ஈடு​படு​கின்​றனர். மேலும், ஆபத்தை உணராமல் வீலிங் உள்​ளிட்ட பல்​வேறு சாகசங்​களி​லும் ஈடு​படு​கின்​றனர். இதனால் சாலை​யில் செல்​லும் மற்ற வாகன ஓட்டிகள் மற்​றும் பாத​சா​ரி​கள் அச்​சத்​தில் உறைந்து போகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

பைக் ரேசில் ஈடு​படுபவர்​கள் மட்​டுமின்​றி, சாலைவிதி​களை முறை​யாக கடைபிடித்து செல்​லும் பொது​மக்​களும் இது​போன்ற சாகசங்​களால் விபத்​தில் உயி​ரிழந்த சம்​பவங்​களும் நிகழ்ந்துள்ளன. இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் 4-ம் தேதி அதிகாலை நுங்​கம்​பாக்​கம் வள்​ளுவர் கோட்​டம் அருகே 15 முதல் 20 இளைஞர்​கள் இருசக்கர வாக​னங்​களில் திரண்​டு, பொதுமக்களின் உயிருக்​கும், பாது​காப்​புக்​கும் அச்​சுறுத்​தல் ஏற்படுத்​தும் வகை​யில் அதிவேக​மாக​வும், அஜாக்​கிரதை​யாக​வும் பைக் சாகசத்​தில் ஈடு​பட்​டனர்.

இதுதொடர்​பான வீடியோ காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வேக​மாக பரவின. இந்த வீடியோ காட்​சிகளின் அடிப்​படை​யில் போக்​கு​வரத்து போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, 16 இளைஞர்​கள் மற்​றும் மாணவர்​களைக் கைது செய்​தனர். அவர்​களிடம் இருந்து சாகசத்​துக்​குப் பயன்​படுத்​தப்​பட்ட 11 பைக்​கு​கள் பறி​முதல் செய்யப்​பட்​டன.

பைக் ரேஸ் மற்​றும் சாகசத்​தில் ஈடு​படும் இளைஞர்​கள், போலீஸாரிடம் சிக்​காமல் இருக்க வாக​னங்​களில் பதிவு எண் பலகை இல்​லாமல் செல்​வதை​யும் வழக்​க​மாகக் கொண்டுள்ளதாக கூறப்​படு​கிறது. இதைத் தொடர்ந்து பைக் ரேஸ் மற்​றும் சாகசங்​களுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் வகை​யில், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​வின்​பேரில், போக்கு​வரத்து காவல் கூடு​தல் ஆணை​யர் சாமுண்​டீஸ்​வரி தலைமை​யில் போக்​கு​வரத்து போலீ​ஸார் கடந்த 3 நாட்​களாக தீவிர வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

இந்த சோதனை​யில் பைக் ரேஸ், சாகசம் மற்​றும் பதிவு எண் பலகை இல்​லாமல் இயக்​கப்​பட்ட 2 ஆயிரம் பைக்​கு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. மக்​களை அச்​சுறுத்​தும் வகை​யிலும், பொதுச் சொத்​துகளுக்கு சேதம் ஏற்​படுத்​தும் வகை​யிலும் வீலிங், பைக் ரேஸ் மற்​றும் பிறபோக்​கு​வரத்து விதிமீறல்​களில் ஈடு​படு​வோர் மீது சட்​டப்​படி கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று போக்குவரத்து காவல் கூடு​தல் ஆணை​யர் சாமுண்​டீஸ்​வரி எச்சரிக்கை விடுத்​துள்​ளார்.

மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ், சாகசம்: சென்னையில் 2,000 பைக்குகள் பறிமுதல்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in