சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்

சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்
Updated on
1 min read

சேலம்: சேலத்​தில் மது​போதை​யில் இருந்த 3 சிறு​வர்​கள் மற்​றொரு சிறு​வனை கொடூ​ராக கொலை செய்த சம்​பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி உள்​ளது. 3 சிறுவர்​களையும் போலீ​ஸார் கைது செய்து விசா​ரிக்​கின்​றனர்.

சேலம் மணி​யனூரைச் சேர்ந்த 16 வயது சிறு​வன் மல்​லூர் அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் 10-ம் வகுப்பு படித்து வந்​தார். அதே பகு​தி​யைச் சேர்ந்த தனி​யார் பள்​ளி​யில் 9-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறு​வன் மற்​றும் மணி​யனூரில் வசிக்​கும் பிஹாரைச் சேர்ந்த 16 வயது சிறு​வன் ஆகிய 3 பேரும் நண்​பர்​கள்​.

இவர்​கள் 3 பேரும் நேற்று முன்​தினம் இரவு மல்​லூர் அருகே உள்ள கெஜ்ஜல்​நாயக்​கன்​பட்டி காட்​டு​வளவு பகு​தி​யில் மது அருந்​தி​யுள்​ளனர். அவர்​களு​டன் ஏற்​கெனவே பழக்​கம் உள்ள பிளஸ் 1 படிக்​கும் சீல​நாயக்​கன்​பட்டி பகு​தி​யைச் சேர்ந்த கோகுல் (17) என்ற சிறு​வனும் வந்​துள்​ளார்.

மது​போதை​யில் இருந்த 3 சிறு​வர்​களுக்கும், கோகுலுக்கும் இடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது. இதில் ஆத்​திரமடைந்த 3 சிறு​வர்​களும் சேர்ந்து கோகுலை கத்​தி​யால் குத்​தி​யும், முகத்தை சிதைத்​தும் கொலை செய்​துள்​ளனர். பின்​னர், சிறு​வனின் உடலை வைத்து வீடியோ எடுத்து கூச்​சலிட்​டுள்​ளனர்.

சத்​தம் கேட்டு அப்​பகுதி மக்​கள் திரண்டு வந்த நிலை​யில், 3 சிறு​வர்​களும் அங்​கிருந்து ஓட முயன்​றுள்​ளனர். அவர்​களில் 2 பேரை பிடித்து மல்​லூர் காவல்நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

கொலை​யான கோகுலின் உடலை போலீ​ஸார் மீட்டு பரிசோதனைக்​காக சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இதனிடையே தப்பி ஓடிய மற்​றொரு சிறு​வனை நேற்று போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். கைதான 3 சிறு​வர்​களை​யும் அரசு கூர்​நோக்கு இல்​லத்​துக்கு அனுப்ப போலீ​ஸார் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர்.

சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்
பொள்ளாச்சி அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உள்பட 4 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in