Published : 20 May 2024 06:05 AM
Last Updated : 20 May 2024 06:05 AM

சென்னை | தாசில்தாரின் கணவரும் சஸ்பெண்ட்: லஞ்ச வழக்கில் சிக்கிய காவலர் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், வெட்டுவாங்கேணி இணைப்பு சாலை சுமார் 40 அடி அகலம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சாலை ஆக்கிரமிப்பு காரணமாக சுமார் 20 அடியாக குறுகியதாம். இந்தசாலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கண்காணிக்க அடையாறு தாசில்தார் (நில அளவை பிரிவு) சரோஜா நியமிக்கப்பட்டார். இதனிடையே, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றினால், இந்த சாலை 40 அடிசாலையாக மாறி இப்பகுதி மக்களுக்குபெரிய சாலை வசதி கிடைக்கும்.

இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள நிலத்தின் மதிப்பும் கோடிக்கணக்கில் உயரும். எனவே தனக்கு லஞ்சம் கொடுத்தால் ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக கூறி முக்கிய நபர் ஒருவரிடம் தாசில்தார் சரோஜா லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, அப்பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதுஒருபுறம் இருக்க லஞ்சப்பணத்தை நேரில் வாங்க விருப்பம் இல்லாத தாசில்தார் சரோஜா, தனதுகணவரும் ஆயுதப்படை காவலருமான பிரவீன்குமார் மூலம் அவரது நண்பரான பரங்கிமலை காவல் நிலையகுற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர் அருண்குமார் என்பவர் மூலம் சுமார்ரூ.3 லட்சம் லஞ்சமாக பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

அப்போது, மறைவில் இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புபிரிவு போலீஸார் அருண்குமாரைகைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் சரோஜாவும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், லஞ்ச விவகாரத்தில் சிக்கிய காவலர்கள் அருண்குமார், பிரவீன் குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர்சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x