சென்னை | ரஷ்ய பயணியிடம் வழிப்பறி செய்த வழக்கில் 2 பேர் கைது

சென்னை | ரஷ்ய பயணியிடம் வழிப்பறி செய்த வழக்கில் 2 பேர் கைது
Updated on: 
1 min read

சென்னை: ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் ஏல்க்ஹான் (38). இவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் வந்த அவர் டெல்லி, கோவா சென்று விட்டு சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே நின்று மெரினாவை ரசித்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர்கும்பல், ஏல்க்ஹானை தாக்கி அவரது செல்போனை பறித்து தப்பியது.

காயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்ற பின்னர் இதுகுறித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், சம்பவம் நடந்தது மெரினா கடற்கரை என்பதால் இதுகுறித்து மெரினா போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்டமாக மெரினா பகுதிகளை சுற்றியுள்ள சிசிடிவி கேமராபதிவுகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் அண்ணாநகரைச் சேர்ந்த வெற்றி, வில்லிவாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

X