கடலூர் மாவட்டத்தில் 7 இளம்பெண்கள் உட்பட 12 பேர் மாயம்

கடலூர் மாவட்டத்தில் 7 இளம்பெண்கள் உட்பட 12 பேர் மாயம்
Updated on: 
1 min read

கடலூர்: கடலூர் மாவட்​டத்​தில் நேற்​றுமுன்​தினம் ஒரே நாளில் 7 இளம்​பெண்​கள் உள்​ளிட்ட 12 பேர் காணா​மல் போனது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

கடலூர் மாவட்​டம், குள்​ளஞ்​சாவடி அடுத்த பள்ளி நீரோடையைச் சேர்ந்த தண்டபாணி மகள் ஜெனி (19), குறிஞ்​சிப்​பாடி அடுத்த மீனாட்​சிபேட்​டையைச் சேர்ந்த வேல்​முருகன் மகள் மது​மிதா (18), சிதம்​பரம் அடுத்த வைப்​புச்​சாவடியைச் சேர்ந்த ராதாகிருஷ்​ணன் மனைவி தேவி (21), கடலூர் முதுநகர் அடுத்த சுத்​துக்​குளத்​தைச் சேர்ந்த கொடியரசன் மகன் விஜயஸ்ரீ (25), சேத்​தி​யாதோப்பை அடுத்த கொண்​ட சமுத்​திரத்​தைச் சேர்ந்த திவாகர் மனைவி சுஷ்மிதா (26), பரங்​கிப்​பேட்டை அடுத்த கரிக்​குப்​பத்​தைச் சேர்ந்த ஹரிவாகசன் மகள் அஸ்வினி (22), கடலூரைச் சேர்ந்த 16 வயது சிறு​வன், விருத்​தாசலத்​தைச் சேர்​நத 17 வயது சிறுமி ஆகியோர் காணா​மல் போயுள்​ளனர்.

இது​த​விர, ராமநத்​தத்​தைச் சேர்ந்த மதி​யழகன் (22), புதுப்​பேட்​டையைச் சேர்ந்த குகன் (28), குறிஞ்​சிப்​பாடியைச் சேர்ந்த கரி​காலன் (35), தேவனாம்​பட்​டினத்​தைச் சேர்ந்த தமிழ்​வளவன் (30 ஆகியோ​ரும் காணா​மல் போயுள்​ளனர். ஒரே நாளில் ஒரு மாவட்​டத்​தில் இருந்து 7 இளம் பெண்​கள் உள்ப்ட 12 பேர் இப்​படி காணா​மல் போயிருப்​பது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இது குறித்து தனித்​தனியே அந்தந்த காவல்​நிலை​யங்​களில் போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து விசா​ரிக்​கின்​றனர்.

கடலூர் மாவட்டத்தில் 7 இளம்பெண்கள் உட்பட 12 பேர் மாயம்
மதுரை: பிரபல நகைக் கடையில் 35 கிலோ நகைகள் கொள்ளை

X