Published : 31 Jul 2023 08:28 AM
Last Updated : 31 Jul 2023 08:28 AM

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

சென்னை/ஆண்டிபட்டி: தமிழக சுகாதரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மருத்துவர் மீனாட்சிசுந்தரம், மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் கேட்டு பெற்றதாக ஊடகத்தில் செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில், தேனி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநரை நேரில் சென்று உணவக உரிமையாளரிடம் ஊடகத்தில் வெளியான செய்தி உண்மைதானா என்று விசாரணை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

விசாரணையின் அடிப்படையில், டீன் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரியவந்த காரணத்தினால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒப்பந்ததாரர் மாரிச்சாமி, டீன் அழ.மீனாட்சிசுந்தரத்துக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து டீன் அழ.மீனாட்சிசுந்தரம் கூறும்போது, அந்த வீடியோ தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே லஞ்சம் கொடுப்பதாக இருந்தால் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கலாமே. இந்த தவறான வீடியோவை பரப்பியவர்கள் மீது மானநஷ்ட வழக்குத் தொடர உள்ளேன் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x