திருவள்ளூர் | சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

திருவள்ளூர் | சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை
Updated on
1 min read

திருவள்ளூர்: கும்​மிடிப்​பூண்டி - எளாவூர் பகு​தியை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2023-ம் ஆண்டு வீட்​டில் தனி​யாக இருந்​தார். எளாவூரை அடுத்​த மேட்​டுக்​குப்​பத்​தைச் சேர்ந்த ஜெக​நாதன் (35), வீட்​டுக்​குள் நுழைந்​து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்​துள்​ளார்.

சிறுமி​யின் பெற்​றோர் அளித்த புகாரின் பேரில், கும்​மிடிப்​பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை, திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்றது.

அரசு தரப்​பில் வழக்​கறிஞர் புவனேஸ்​வரி ஆஜராகி வாதாடி​னார். ஜெக​நாதன் மீதான குற்​றங்​கள் நிரூபண​மானதையடுத்​து, மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்ற உமாமகேஸ்​வரி ஜெக​நாதனுக்​கு, வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைந்த குற்​றத்​துக்கு 10 ஆண்​டு​ சிறை, ரூ.10,000 அபராத​ம், பாலியல் தொல்லை கொடுத்த குற்​றத்​துக்கு 5 ஆண்​டு​ சிறை, ரூ.10,000 அபராத​ம் விதித்தார்.

சிறுமிக்கு ரூ.1 லட்​சம் ஒரு லட்​சம் நிவாரண​ம் வழங்க வேண்​டும் என்​றும் அரசுக்​கு நீதிபதி பரிந்​துரைத்​துள்​ளார். செங்குன்றம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 17 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் | சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை
கோவை அருகே சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீஸார் தீவிரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in