Published : 17 May 2022 07:31 AM
Last Updated : 17 May 2022 07:31 AM

கோர்ப்வேக்ஸ் தடுப்பூசி விலை குறைப்பு

புதுடெல்லி: இந்தியாவில் பயலாஜிக்கல்-இ நிறுவனத்தார் கரோனா வைரஸுக்கு எதிராக கோர்ப்வேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். நாட்டில் இந்த தடுப்பூசி 12 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது.

இது மட்டுமின்றி மேலும் 2 தடுப்பூசிகளுக்கும் அவசரகால அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன்படி, 5 - 12 வயது வரையிலான சிறார்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்தவும் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு சைடஸ் தடுப்பு மருந்தை செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இந்நிலையில், கோர்ப்வேக்ஸ் தடுப்பூசியின் விலையை பயலா ஜிக்கல் இ நிறுவனம் குறைத்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசியானது ரூ.250 விலையில் (ஜிஎஸ்டி வரிகள் உட்பட) விற்பனை செய்யப்படும்.

ஆனால் கோர்ப்வேக்ஸ் தடுப்பூசியைப் பெறுவோர் இந்த விலையுடன் நிர்வாகக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி இனிமேல் ரூ.400-க்கு இந்த தடுப்பூசி கிடைக்கும் என்று தெரிகிறது. முன்பு கோர்ப்வேக்ஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ.840 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

எல்லோரும் வாங்குவதற்கு ஏற்ற வகையில் விலையைக் குறைத்துள்ளதாக பயலாஜிக்கல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x