Published : 23 Apr 2020 07:48 AM
Last Updated : 23 Apr 2020 07:48 AM

கரோனா வைரஸ் | ரேபிட் கிட் கருவி பலனளிக்குமா? உலகச் சுகாதார அமைப்பு கூறுவதென்ன?- சீன நிறுவனங்களின் விளக்கம் என்ன?

கரோனா வைரஸ் டெஸ்ட்டுக்கு உதவும் ரேபிட் கிட் என்ற அதிவிரைவு ‘ஆன்ட்டி-பாடி’ சோதனைக் கருவியின் பயன்பாடுகள் குறித்து சீன நிறுவனங்களும், உலகச் சுகாதார அமைப்பும் விளக்கமளித்துள்ளன.

இந்தியாவில் ரேபிட் கிட் மூலம் கரோனா சோதனை நடத்தப்பட்டதில் ஒன்றுக்கு ஒன்று முரணான மாறுபட்ட முடிவுகள் வந்ததையடுத்து ஐசிஎம்ஆர் இதனை பயன்படுத்துவதை 2 நாட்களுக்கு நிறுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது.

ஆர்டி-பிசிஆர் முறைப் பரிசோதனைகளில் முடிவுகள் தாமதமானாலும் துல்லியமாகக் கூறிவிடும் தன்மை கொண்டது. இதைத்தான் உலக சுகாதார அமைப்பும் பரிந்துரை செய்தது.

ஆனால் கரோனா பரவலின் வேகத்துக்கு ரேபிட் கிட் தான் பயன்படும் என்று பல நாடுகளும் கருதி சீனாவிடமிருந்து வாங்கின. நியுக்ளீய்க் ஆசிட் டெஸ்ட் என்ற வகையைச் சேர்ந்த இந்தப் பரிசோதனையில் தொண்டை உள்ளிட்ட மேல் மூச்சுப்பாதையிலிருந்து சளி மாதிரி கரோனா டெஸ்ட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும், இந்த மாதிரியில் கபம், எச்சில், சில செல்கள் ஆகியவை பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதில் வைரல் ஆர்.என்.ஏ.இருந்தால் தெரிந்து விடும். இதனை என்சைம் மூலம் டிஎன்ஏ- ஆக மாற்றி இந்த டி.என்.ஏ. பொருள் ஆர்.டி.-பிசிஆர் மெஷினில் இடப்பட்டு சாம்பிளை உஷ்ணப்படுத்தி பிறகு உஷ்ணத்தை நீக்கி பல நகல்களை உருவாக்கும். பிறகு சாம்பிளில் அடையாளம் ஏற்படுத்தும் விதமாக ரசாயன மார்க் செய்யப்படும். இந்தச் சோதனையில் சோதனை எந்திரத்தில் புளோரசண்ட் தெறிப்புகள் தெரிந்தால் இது கரோனா வைரஸ் தொற்று இருப்பதைக் குறிக்கிறது.

இது கால தாமதம் ஏற்படுத்தும் நடைமுறையாகும் மாறாக ரேபிட் டெஸ்ட் கிட் என்பது, ரத்த மாதிரிகளை சீரம் (serum) என்பதைக்கொண்டு பயன்படுத்தி கரோனாவைக் கண்டுபிடிக்கும். ரத்த சீரமில் ஆன்ட்டி-பாடிகள் இருக்கும். ஆன்ட்டி-பாடிகளும் புரோட்டீன்கள்தான். இது நோய் எதிர்ப்புச் சக்தி செல்களின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது, அதாவது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ரேப்பிட் கிட் டெஸ்ட்டில் இரண்டு வகை உண்டு ஒன்று வெளியிலிருந்து உள்ளே தொற்றியிருக்கும் ஆன்ட்டிஜென் என்பதைக் கண்டுபிடிப்பது, மற்றொன்று ஆன்ட்டி-பாடி கண்டுபிடிக்கும் முறையாகும்.

இந்த ரேபிட் கிட் டெஸ்ட்களில் முடிவுகல் 34%லிர்ந்து 80% வரை மாறுபாடு இருக்கும் என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்ததால்தான் இதனை அது பரிந்துரை செய்யவில்லை. ஆன்ட்டி-பாடி டெஸ்ட்களில் நோயாளிகள் நோய் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து சுமார் 2 வாரங்களுக்குப் பிறகே ஆன்ட்டி-பாடி எதிர்வினை தெரியவரும். எனவே இது நோயிலிருந்து குணமடைந்து கொண்டிருக்கும் கட்டத்தில் பயன்படுத்த வேண்டிய ஒன்று என்றே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சமூக நோய்எதிர்ப்பாற்றல் எனப்படும் herd immunity கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளிடம் எவ்வளவு ஆன்ட்டி-பாடி உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க ரேபிட் டெஸ்ட் உதவும்.

அதாவது உண்மை என்னவெனில் கோவிட்-19 நோயாளிகள் நோய்க்குறி குணங்கள் இல்லாமல் இருந்தால் கண்டுப்பிடிக்க ரேபிட் கிட் டெஸ்ட் உதவாது என்பதே. நோய்க்குறிகுணங்களே கரோனாவைப் பொறுத்த மட்டில் 10 நாட்களுக்குப் பிறகுதான் தெரியவரும். மேலும் இது மற்ற நோய்க்குறி கிருமிகளுடன் ஊடாடி தவறான முடிவுகளை வழங்கும் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில் சீன நிறுவனங்கள் இது தொடர்பாக கூறியிருப்பதாவது, “இந்தச் சாதனங்களை தொழில்பூர்வ மருத்துவமனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பெற்றோர் உடைய பரிசோதனை மையங்களில்தான் பயன்படுத்த வேண்டும். வீடுகளிலெல்லாம் பயன்படுத்தக் கூடாது. இது ஒரு கூடுதல் பரிசோதனை வசதிதான். இதன் முடிவுகளை வைத்து சிகிச்சை அளிக்க முடியாது எங்களுடைய ரேபிட் கிட் சாதனங்கள் நாட்டின் ஏற்றுமதி தரம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதித்தரத்துக்கு உகந்தவையே” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x