

விக்ரம் நடிப்பில் அடுத்த படம் என்ன என்பது முடிவாகியுள்ளது.
‘வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு விக்ரமின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அடுத்து விக்ரம் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதனை ‘இருமுகன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
’இருமுகன்’ படத்தினைப் போலவே, இப்படத்துக்கும் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதில் விக்ரமுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக, அருண் விஸ்வா தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க புதிய படமொன்று அறிவிக்கப்பட்டது. அப்படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து ‘96’ பிரேம்குமார் மற்றும் அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் ஆகியோரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரேம்குமார் படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது. போடி ராஜ்குமாரின் படமும் பட்ஜெட் பிரச்சினையால் கைவிடப்பட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.