ரீ-ரிலிஸ் ஆகிறது விஜய்யின் ‘தெறி’

ரீ-ரிலிஸ் ஆகிறது விஜய்யின் ‘தெறி’
Updated on
1 min read

விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் தணிக்கை சான்றிதழ் பிரச்​சினை​யால்​வெளி​யாக​வில்​லை. இந்​தப் படத்​தைப் பொங்​கலுக்கு வெளி​யிடும் முயற்​சி​யில், படத்தின்​ த​யாரிப்​பாளர் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல் முறை​யீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

அப்​படம் வெளியாகுமா, ஆகாதா என்ற நிலையில், விஜய் நடித்து வெற்றி பெற்ற பழைய திரைப்​படங்​களை ரீரிலிஸ் செய்ய சில தயாரிப்பாளர்​கள் முயன்று வந்​தனர்.

இந்​நிலை​யில் விஜய் நடித்து சூப்​பர் ஹிட்​டான ‘தெறி’ படத்தைப் பொங்​கலுக்கு மறு​வெளி​யீடு செய்வ​தாகத் தயாரிப்​பாளர் கலைப்​புலி எஸ் தாணு அறி​வித்​துள்​ளார்.

அட்லி இயக்​கிய இப்​படத்​தில் விஜய்​யுடன் சமந்​தா, எமி ஜாக்​சன், ராதி​கா, இயக்​குநர் மகேந்​திரன், ராஜேந்திரன்உள்பட பலர் நடித்தஇப்​படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளி​யானது. இதற்​கு ஜி.​வி.பிர​காஷ் இசை அமைத்​திருந்​தார். இதை ஜன.14-ம் தேதி மறு வெளி​யீடு செய்​வ​தாகத் தயாரிப்​பாளர் தாணு தெரி​வித்​துள்​ளார்.

ரீ-ரிலிஸ் ஆகிறது விஜய்யின் ‘தெறி’
‘ஜனநாயகன்’ தள்ளிவைப்பு எதிரொலி: பொங்கல் வெளியீட்டுக்கு குவியும் படங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in