

‘ஜனநாயகன்’ வெளியீடு இல்லை என்பது உறுதியானதால், பொங்கல் வெளியீட்டுக்கு பல்வேறு படங்கள் தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தி வருகின்றன.
ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த படம் ‘ஜனநாயகன்’. தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையினால் தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆனால், பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.
இதனால், பல்வேறு படங்கள் ஜனவரி 14 மற்றும் 15-ம் தேதிகள் வெளியாக இருக்கின்றன. கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’, ஜீவா நடித்துள்ள ‘தலைவன் தம்பி வழியில்’, சந்தானம் நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’, மோகன் ஜி. இயக்கியுள்ள ‘திரெளபதி 2’. விஜய் நடிப்பில் மறுவெளியீடாக ‘தெறி’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இவற்றை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக தொடங்கவுள்ளன.
ஜனவரி 14-ம் தேதி ‘வா வாத்தியார்’ வெளியாகும் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இதர படங்கள் யாவுமே ஜனவரி 15-ம் தேதி வெளியாகவுள்ளன.
ஜனவரி 10-ம் தேதி வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படமே பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகின்றன. பொங்கல் விடுமுறை காலங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவார்கள் என்பதால் தான் இந்தப் போட்டி என்கிறார்கள்.