

‘மகாராஜா 2’ படம் குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி.
‘மகாராஜா 2’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது அது குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதில் “மகாராஜா 2 படத்துக்கான கதையினை இயக்குநர் நித்திலன் எழுதிவிட்டார். இப்போது வரை என்ன எழுதியிருக்கிறார் என்று தெரியாது. ஆனால், என்ன எழுதியிருக்கிறார் என்பதை கேட்க ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யாப், மம்தா மோகன்தாஸ், நட்டி, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மகாராஜா’. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் மட்டுமன்றி பல்வேறு மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களும் இப்படத்தினை பார்த்துவிட்டு பாராட்டியிருந்தார்கள்.
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஸ்லம் டாக்’, பாலாஜி தரணிதரன் இயக்கிவரும் படம், ‘பாக்கெட் நாவல்’, மணிரத்னம் இயக்கவுள்ள படம் என கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர்த்து ‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கிய கவுரவ கதாபாத்திரத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.