வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ஜூலையில் வெளியீடு!

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ஜூலையில் வெளியீடு!
Updated on
1 min read

‘சூர்யா 46’ படத்தினை ஜூலையில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ வெளியீட்டை முன்வைத்தே, இதன் வெளியீடு முடிவாகும் என கூறப்பட்டது. அதன்படி, ‘சூர்யா46’ படத்தினை ஜூலையில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘சூர்யா 46’ படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இதனை தமிழ் மற்றும் தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

‘சூர்யா 46’ படத்துக்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் பணிகளை முடித்துவிட்டதால், ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதில் நஸ்ரியா, நஸ்லின் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ஜூலையில் வெளியீடு!
டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணியி​லிருந்து பாட் கம்​மின்ஸ் வில​கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in