

பாட் கம்மின்ஸ்
மெல்பர்ன்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து குணம் அடைந்த பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட் ஆகியோரும் அணியில் இடம்பெற்று இருந்தனர்.
இந்நிலையில், ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். மேலும், மேட் ஷார்ட்டும் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் மாற்று வீரர்களாக பென் டுவார்ஷியஸ், மேட் ரென்ஷா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, டிம் டேவிட், கேமரூன் கிரீன், நேதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மாட் குனேமன், கிளென் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸாம்பா, பென் டுவார்ஷியஸ், மேட் ரென்ஷா.