‘லீடர்’ சண்​டைக் ​காட்​சிக்கு வெளிநாட்டு கலைஞர்​கள்

‘லீடர்’ சண்​டைக் ​காட்​சிக்கு வெளிநாட்டு கலைஞர்​கள்
Updated on
1 min read

துரை.செந்​தில்​கு​மார் இயக்​கத்​தில் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நாயக​னாக நடித்​துள்ள படம், ‘லீடர்’. ராஜ்புத், ஷாம், ஆண்ட்​ரியா உள்​ளிட்​டோர் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்.

இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில், ‘லெஜெண்ட்’ சரவணன் கூறும்​போது, “ஓர் அப்​பாவி அப்​பா​வும் மகளும் சந்​தோஷ​மாக வாழ்ந்து கொண்​டிருக்​கிறார்​கள். திடீரென்று அவர்​களின் வாழ்க்கை​யில் கேங்​ஸ்​டர் கும்​பல் நுழைகிறது, பிறகு நடக்​கும் விஷயங்களை இயக்​குந‌ர் துரை செந்​தில்​கு​மார் இன்​றைய தலைமுறை​யினருக்​குப் பிடிக்​கும் வகை​யில் நேர்த்​தி​யாக​வும், அழகாக​வும் இயக்கி இருக்​கிறார்.

இப்​படத்​தில் அவர் தன்னை முழு​தாக அர்ப்​பணித்​துக் கொண்​டார். ஒரு வேலை​யில் யார் ஒருவர் தன்னை முழு​மை​யாக அர்ப்​பணித்​துக் கொள்கிறார்களோ, அந்த வேலை அற்​புத​மாக அமை​யும்.

இந்த படத்​தின் கிளை​மாக்ஸ் சண்​டைக் காட்​சியை ரயி​லில் படமாக்​கினோம். குறுகலான இடத்​தில் 100-க்​கும் மேற்​பட்ட வெளி​நாட்​டுச் சண்டை கலைஞர்​களு​ட​னும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மக்​களு​ட​னும் படப்​பிடிப்பு நடை​பெற்​றுக் கொண்​டிருந்​த​போது இங்கு எத்​தனை ஆம்​புலன்ஸ் இருக்​கிறது என்று கேட்​டேன், அவர் ஒன்​று​தான் என்​றார். மேலும் 2 அல்​லது 3 ஆம்​புலன்​ஸ்​களை வரவை​யுங்​கள். இங்கு யாருக்கு எப்​படி எங்கு அடி​படும் என்று தெரி​யாது.

எனக்கு கூட அடிபடலாம் என்​றேன். 10-வது நாளில் எனக்​குக் காலில் லேசாக அடிபட்​டது, தொடர்ந்து படப்​பிடிப்பை நடத்தலாமா, வேண்​டாமா என்ற நிலை ஏற்​பட்​டது. உடன் பணியாற்​றும் தொழிலா​ளர்​களை மனதில் வைத்து அவர்​களைக் காத்​திருக்க வைக்​கக் கூடாது என்​ப​தற்​காக படப்​பிடிப்​பில் தொடர்ந்து கலந்​து கொண்​டேன்​” என்​றார்​.

‘லீடர்’ சண்​டைக் ​காட்​சிக்கு வெளிநாட்டு கலைஞர்​கள்
சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேரம்: ஈரானில் இருந்து திரும்பிய இந்தியரின் பயண அனுபவம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in