‘டாக்ஸிக்’ முதல் பாடல் வீடியோ எப்படி?

‘டாக்ஸிக்’ முதல் பாடல் வீடியோ எப்படி?
Updated on
1 min read

‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்குப் பிறகு யஷ் நடிப்பில் ஒரே நேரத்தில் கன்னடம் - ஆங்கிலம் மொழிகளில் படமாக்கப்பட்டுவரும் ‘டாக்ஸிக்’ இந்தியாவின் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.

யஷ் நாயகனாக நடித்தாலும் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி எனப் படத்தில் இடம்பெற்றுள்ள நாயகிகளின் பட்டியல் பெரிதாக இருக்கிறது.

படத்தை இயக்கிவரும் கீது மோகன்தாஸின் கதைக்கு நாயகன் யஷ்ஷும் அவருடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார். விஷால் மிஸ்ரா இசையில் இப்படத்தில் இடம்பெறும் ‘தபாஹி’ என்கிற முதல் பாடலை மியூசிக் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள்.

தமிழுக்கான வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். யஷ்ஷும் கியாரா அத்வானியும் தோன்றும் இப்பாடல் இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

‘டாக்ஸிக்’ முதல் பாடல் வீடியோ எப்படி?
Kaathal: The Core - இணையரை ரட்சித்து மீண்ட ‘மீட்பர்’ ஓமனா | திரை தேவதைகள் 25

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in