“நல்ல படங்​கள் கொடுக்​கும் இயக்குநர்​கள் குறைந்து விட்டார்கள்” - ஆர்.வி.உதயகுமார் கருத்து

“நல்ல படங்​கள் கொடுக்​கும் இயக்குநர்​கள் குறைந்து விட்டார்கள்” - ஆர்.வி.உதயகுமார் கருத்து
Updated on
1 min read

ராஜா பத்​ம​நாபன் இயக்​கத்​தில் உரு​வாகி​யுள்ள இசை ஆல்​பம், ‘சைலன்ட் இன்ஃபுளூயன்​சர்’. பலராம் ஜெ.​பாலாஜி நடித்​துள்ள இப்பாடலை ஜி.​வி. பிர​காஷ் குமார், ஐக்கி பெர்ரி பாடி​யுள்​ளனர். பாடலை ஜெயந்தி எழு​தி​யுள்​ளார். அஸ்​வ​மித்ரா இசை அமைத்துள்ள இப்​பாடலுக்கு தினேஷ் நடனம் அமைத்​துள்​ளார்.  வெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் தயாரித்​துள்ள இந்த இசை ஆல்பத்​தின் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இயக்​குநர்​கள் சரண், பேரரசு, ஆர்.வி. உதயகுமார், எழில், வெங்கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் கிரியேட்​டிவ் ஹெட், அசோக் அண்​ணா​மலை உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

இயக்​குநர் ஆர்​.​வி.உதயகு​மார் பேசும்​போது, “முழு படத்​திலிருந்து ஒரு பாடலை பார்க்​கும் திருப்​தி, இப்​பாடலில் கிடைத்​தது என்பதில் எள்​ளள​வும் சந்​தேகம் இல்​லை. இது கண்​டிப்​பாக வரவேற்​பைப் பெறும். நல்ல படங்​கள் கொடுக்​கும் இயக்​குநர்​கள் குறைந்து விட்​டார்​கள். அவர்​களைச் சரி​யாக பயன்​படுத்​தத் தயாரிப்​பாளர்​களும் நடிகர்​களும் தவறி விட்​டார்​கள். தமிழ் திரையுல​கைக் காப்​ப​தில் அனை​வரும் ஒற்​றுமை​யுடன் செயல்பட வேண்​டும்” என்​றார்.

“நல்ல படங்​கள் கொடுக்​கும் இயக்குநர்​கள் குறைந்து விட்டார்கள்” - ஆர்.வி.உதயகுமார் கருத்து
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in