

மூன்று விதமான காதலைச் சொல்லும் விதமாக ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதை அறிமுக இயக்குநர் ராஜசேகர்.ஜி இயக்கியுள்ளார்.
த்ரிகுண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஜீத்தா கோஷ், இனியா, ராதா, ரவி மரியா, தம்பி ராமையா, சத்யன், சாம்ஸ், ஆலி உள்பட பலர் நடித்துள்ளனர். அருண் விஷுவல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கோவை ரமேஷ், தமிழ், தெலுங்கில் இதைத் தயாரித்துள்ளார்.
விஜய ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அருணகிரி இசையமைத்துள்ளார். “3 கோணங்களில் நடக்கும் இக்கதையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக இது இருக்கும். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம்.பிப். 13-ல் வெளியாகிறது” என்றார் இயக்குநர் ராஜசேகர்.ஜி.