ஆக.14-ல் சூர்​யா​​வின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’

ஆக.14-ல் சூர்​யா​​வின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’
Updated on
1 min read

‘கருப்பு’ படத்​தின் வெற்​றிக்​குப் பிறகு சூர்யா நடிப்​பில் வெளிவர இருக்​கும் திரைப்படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்​கர் சல்​மான் நடித்த ‘லக்கி பாஸ்​கர்’ படங்​களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்​படத்தை இயக்​கி​யுள்​ளார்.

மமிதா பைஜு, ராதிகா சரத்​கு​மார், ரவீனா டாண்​டன் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். நிமிஷ் ரவி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ஜி.​வி.பிர​காஷ் இசை அமைத்​துள்ள இப்​படத்​தின் டீஸர், ஃபர்​ஸ்ட் லுக் போஸ்​டர் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றது. தமிழ், தெலுங்​கில் வெளி​யாகும் இப்​படத்​தின் ரிலீஸ் தேதியை படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி ஆக.14-ம் தேதி இப்​படம் வெளி​யாகிறது. தமிழ்​நாட்​டில் திங்க் ஸ்டூடியோஸ் இப்​படத்தை வெளி​யிடு​கிறது.

ஆக.14-ல் சூர்​யா​​வின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in