ஸ்மாஷ் கட்: முரண்பாடுகளின் அழகியல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 29

இன்​செப்​ஷன்

இன்​செப்​ஷன்

Updated on
3 min read

சினிமா, நதி போல ஓடிக்கொண்டிருக்கும்போது, திடீரென நீர்வீழ்ச்சி குறுக்கிட்டால் எப்படி இருக்கும்? அதுதான் ஸ்மாஷ் கட் (Smash Cut). ஒரு காட்சி மெதுவாகவோ, அமைதியாகவோ போய்க் கொண்டிருக்கும்போது, எவ்வித முன்னறி விப்புமின்றி முற்றிலும் மாறுபட்ட, சத்தமான அல்லது வேகமான ஒரு காட்சிக்குத் தாவுவதே இந்த நுட்பம். இது பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கவும், கதையில் பெரியமாற்றத்தை உணர்த்தவும் பயன்படுத்தப்படுகிறது.

​முரண்​பாடுகளின் விளை​யாட்டு

ஸ்மாஷ் கட் என்​பது முரண்​பாடு​களை (கான்ட்​ராஸ்ட்) அடிப்​படை​யாகக் கொண்​டது. இது இரண்டு வெவ்​வேறான உணர்ச்​சிகளை அல்​லது சூழல்​களை நேருக்கு நேர் மோத​விடு​கிறது. அமை​தியி​லிருந்து ஆரவாரம் (சைலண்ட் டு ப்ளாஸ்ட் ஆஃப் சவுண்ட்): ஒரு கதா​பாத்​திரம் ஆழ்ந்த உறக்​கத்​தில் இருக்​கும் சூழலிலிருந்​து, திடீரென ஓர் அலாரத்​தின் சத்​தத்​துக்கோ அல்​லது போர்க்​களத்​தின் இரைச்​சலுக்கோ மாறு​வது.

நிசப்​தத்​திலிருந்து உரத்த சத்​தம் (க்​ரேக்கீசவுண்ட்): அறை​யில் அமைதி நில​வும்​போது, திடீரென ஒலிக்​கும் பதற்​ற​மான குரலோ ஏதேனும் ஒரு கண்​ணாடி உடை​யும் சத்​தமோ, துப்​பாக்கி வெடிக்​கும் சத்​தமோ ஒரு ஸ்மாஷ் கட் மூலம் காட்​டப்​படும்​போது அதன் தாக்​கம் பல மடங்கு அதி​க​மாகும்.

நிழலிலிருந்து ஒளி (டார்க் டு பிரைட்): இருண்ட அறையி​லிருந்து திடீரென பிர​காச​மான சூரிய ஒளி வீசும் கடற்​கரைக்​குக் காட்​சியை மாற்​று​வது.

அசைவற்ற நிலை​யி​லிருந்து இயக்​கம்: ஒளிப்​ப​தி​வில் ஒரு நிலை​யான ஷாட் மற்​றும் வேக​மான இயக்க ஷாட் (Movement Shot) ஆகிய​வற்​றுக்கு இடையி​லான ஸ்மாஷ் கட் தனித்​து​வ​மான மொழியைக் கொண்​டது.

ஸ்டேடிக் டு மோஷன் - ஒரு கதா​பாத்​திரம் சிலை​யாக அமர்ந்து யோசித்​துக் கொண்​டிருக்​கும் நிலை​யான காட்​சியி​லிருந்​து, அடுத்த நொடியே அவர் ஒரு ரயி​லில் வேக​மாகப் பயணிப்​பது போன்ற காட்​சிக்கு மாறு​வது. இது கால மாற்​றத்தை அல்​லது அந்த கதா​பாத்​திரத்​தின் மனவேகத்​தைக் குறிக்​கும்.

மோஷன் டு ஸ்டேடிக் - அதிவேக​மான துரத்​தல் காட்சி நடந்து கொண்​டிருக்​கும்​போது, நேர்​மாறாக ஓர் அமை​தி​யான நூல​கத்​தில் அந்த கதா​பாத்​திரம் மூச்​சிரைக்க அமர்ந்​திருப்​பது போன்ற காட்​சிக்கு மாறு​வது. இது அந்​தத் துரத்​தலின் முடிவை அதிரடி​யாக உணர்த்​தும்.

அகிரா குரசோ​வா: ஸ்மாஷ் கட்​டின் பிதாமகன்

ஜப்​பானிய மாஸ்​டர் அகிரா குரோ​சாவா தனது படங்​களில் இந்த முரண்பாடு​களை மிகச்​சிறப்​பாகக் கையாண்​ட​வர். அவரது ‘செவன் சாமு​ராய்’ படத்​தில், மழை​யில் நடக்​கும் மிகத் தீவிர​மான சண்​டைக் காட்​சிகளுக்​கிடையே திடீரென நிசப்​த​மான, அசைவற்ற காட்​சி​யைக் கொண்டு வரு​வார்.

இயற்​கை​யின் சீற்​றத்​தை​யும் (காற்​று, மழை), மனிதனின் மவுனத்​தை​யும் அவர் ஸ்மாஷ் கட் மூலம் இணைப்​பார். ஒரு காட்​சி​யின் வேகத்தை திடீரெனக் குறைப்​ப​தன் மூலம் அந்த மரணத்​தின் கனத்தை அவர் பார்​வை​யாளர்​களுக்​குக் கடத்​து​வார்.

ஹாலிவுட் சினிமா உதா​ரணங்​கள்

ஹாலிவுட் படங்​களில் ஸ்மாஷ் கட் என்​பது ஒரு ‘ஜம்ப் ஸ்கேர்’ ஆகவோ அல்​லது நகைச்​சுவைக்​காகவோ அதி​கம் பயன்​படுத்​தப்​படு​கிறது.

<div class="paragraphs"><p>எக்லிஸ்...</p></div>

எக்லிஸ்...

நகைச்​சுவை​யில்: ஒரு கதா​பாத்​திரம் “நான் கண்​டிப்​பாக அந்த இடத்​துக்​குப் போகவே மாட்​டேன்” என்று உறு​தி​யாகச் சொல்​லும்​போதே, அடுத்த காட்​சி​யில் அவர் அதே இடத்​தில் பரி​தாப​மாக நிற்​ப​தைக் காட்​டு​வது.

திகில் படங்​களில்: ஒரு கதா​பாத்​திரம் இருட்​டில் மெது​வாக நடந்து செல்​லும் போது, எவ்​வித இசை​யுமின்றி நில​வும் அமை​தியை உடைத்​துக்​கொண்டு ஒரு பேய் தோன்​று​வது.

இன்​செப்​ஷன்: கிறிஸ்​டோபர் நோலன் தனது படங்​களில் கனவுக்​கும் நிஜத்​துக்கு இடையி​லான மாற்​றத்தை ஸ்மாஷ் கட் மூலம் அதிரடி​யாகக் காட்​டு​வார். ஒரு கதா​பாத்​திரம் தண்​ணீரில் விழுந்​ததும், அடுத்த நொடி அவர் ஓர் அறை​யில் திடுக்​கிட்டு எழு​வது மிகச்​சிறந்த உதா​ரணம்.

இத்​தாலிய சினிமா

குறிப்​பாக அதன் நியோ-ரியலிசம் மற்​றும் அதன் பிறகு வந்த மாடர்​னிஸ்ட் அலைகளில், ‘ஸ்​மாஷ் கட்’ நுட்​பத்தை ஒரு எடிட்​டிங் கரு​வி​யாக மட்​டும் பார்க்காமல், சமூக மற்​றும் உளவியல் மாற்​றத்​தின் குறி​யீ​டாகப் பயன்​படுத்​தி​யது.

மைக்​கலேஞ்​சலோ அந்​தோனியோனி தனது படங்​களில் ‘அந்​நியப்​படு​தல்’ (Alienation) என்ற கருப்​பொருளை அதி​கம் கையாளு​வார். L’Eclisse (1962) திரைப்​படத்​தின் இறு​தி​யில், கதை​யின் நாயகர்​கள் வரு​வார்​கள் என்று எதிர்​பார்த்​துக்​கொண்​டிருக்​கும் தருணத்​தில், திடீரென அந்த இடத்​தின் அசைவற்ற பொருட்​களை (Objects), கட்​டிடங்​களை ஒரு ஸ்மாஷ் கட் மூலம் காட்​டு​வார்.

இது மனித உறவு​களின் முறிவை​யும், ஜடப்​பொருட்​களின் ஆதிக்​கத்​தை​யும் பார்​வை​யாள​ருக்கு அதிர்ச்​சி​யாகக் கடத்​தும். ஃபெடரிகோ ஃபெலினி, தனது படங்​களில் நிஜத்​துக்கும் கனவுக்​கும் இடையி​லான எல்​லையை உடைக்க ஸ்மாஷ் கட்​டைப் பயன்​படுத்​தி​னார்.

8½ (எயிட் அண்ட் எ ஹாஃப்) கதா​பாத்​திரம் ஒரு சாதாரண அறை​யில் பேசிக்​கொண்​டிருக்​கும்​போதே, அடுத்த நொடி அவர் அந்​தரத்​தில் பறப்​பது போன்றோ அல்​லது விசித்​திர​மான திரு​விழா​விற்​குள்ளோ (Surrealism) ஸ்மாஷ் கட் மூலம் தூக்கி எறியப்​படு​வார்.

இது ஒரு கலைஞனின் குழப்​ப​மான மனநிலையை விவரிக்​கப் பயன்​பட்​டது. மற்​றொரு இத்​தாலிய இயக்​குநர் பியர் பாவ்லோ பசோலினி, தனது படங்​களில் வறுமை​யை​யும், புனிதத்​தை​யும் ஒப்​பிட்​டுக் காட்ட ஸ்மாஷ் கட்​டைப் பயன்​படுத்​தி​னார். அழுக்​கான குடிசைப்​பகு​தியி​லிருந்து திடீரென ஓர் அழகான ஓவி​யம் போன்ற காட்​சிக்கு மாறு​வது, அவர் சொல்ல வந்த வர்க்க முரண்​பாடு​களை அழுத்​த​மாகப் பதிய வைத்​தது.

ஒளிப்​ப​தி​வாளர் மற்​றும் சவுண்ட் டிசைனரின் ஒருங்​கிணைப்பு

சிறந்த ஸ்மாஷ் கட் உரு​வாக ஒளிப்​ப​தி​வாள​ரும் சவுண்ட் டிசைனரும் கைகோர்க்க வேண்​டும்.

ஒளிப்​ப​தி​வாளர்: லுக் ரூம் மற்​றும் நெகட்​டிவ் ஸ்பேஸை முற்​றி​லும் மாற்றி அமைப்​ப​தன் மூலம் காட்சி அதிர்ச்​சியை உரு​வாக்​கலாம். ஒரு ஷாட்​டில் கதா​பாத்​திரம் வலது பக்​கம் பார்த்​துக் கொண்​டிருந்​தால், அடுத்த ஸ்மாஷ் கட் ஷாட்​டில் அவர் இடது பக்​கம் பார்த்​திருப்​பது போன்ற ‘டிஸ்​-ஓரியண்​டேஷன்’ (Disorientation) நுட்​பத்​தைப் பயன்​படுத்​தலாம்.

சத்​தம்: காட்​சி​யின் மாற்​றத்​துக்கு ஒரு மில்லி செகண்ட் முன்​ன​தாகவே சத்​தத்​தைத் தொடங்கி (J-Cut) அல்​லது காட்சி மாறியதும் திடீரெனச் சத்​தத்தை நிறுத்தி (L-Cut) ஸ்மாஷ் கட்​டின் தீவிரத்தை அதி​கரிக்​கலாம்.

எப்​போது பயன்​படுத்த வேண்​டும்?

கனவிலிருந்து விழிப்பு : இதுவே மிக​வும் பொது​வான பயன்​பாடு. கால மாற்​றம் (எலிப்​டிக்​கல் எடிட்​டிங்): தேவையற்ற இடைவெளி​களைத் தவிர்த்து கதையை அடுத்த கட்​டத்​துக்கு நகர்த்த.

உணர்ச்சி மாற்​றம்: ஒரு மகிழ்ச்​சி​யான தருணத்​திலிருந்து திடீரென துயர​மான செய்தி வரும்​போது.

சினி​மா​வின் துடிப்பு

புரொஃபைல் ஷாட்​கள் முகத்​தின் ரகசி​யத்​தைப் பேசுகின்​றன, ‘கட்​டிங் ஆன் ஆக் ஷன்’ காட்​சிகளின் ஓட்​டத்தை உறுதி செய்​கிறது. ஆனால், ஸ்மாஷ் கட் என்​பது சினி​மா​வின் இதயத்​துடிப்பு போன்​றது. அது பார்​வை​யாளரை உறங்​க​வி​டா​மல் செய்​கிறது.

“சினிமா என்​பது 24 பிரேம்​களில் சொல்​லப்​படும் உண்​மை” என்​பார்​கள். அந்த உண்​மையை உரக்​கச் சொல்​ல​வும், மவுன​மாகச் சொல்​ல​வும் இந்த ஸ்மாஷ் கட் எனும் அதிரடி நுட்​பம் அவசி​ய​மாகிறது.

தேவர் மகனின் நுணுக்​க​மான புரொஃபைல் ஷாட்​களும், குரசோ​வா​வின் அதிரடி மாற்​றங்​களும் சேர்ந்​தது​தான் சினிமா எனும் பேராச்​சரி​யம். ஒளிப்​ப​தி​வாள​ராக​வும், இயக்​குந​ராக​வும்​ இந்​த நுட்​பங்​களைப்​ புரிந்​து​கொள்​வது, ஒரு கதையை வெறும்​ காட்​சிகளாக இல்​லாமல்​ ஓர்​ அனுபவ​மாக மாற்​ற உதவும்​.

(புதன்​ தோறும்​ ஒளி​காட்​டுவோம்​)

- cjrdop@gmail.com

<div class="paragraphs"><p>இன்​செப்​ஷன்</p></div>
திரையில் செதுக்கப்படும் முகங்கள்: புரொஃபைல் ஷாட்களின் அழகியல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 28

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in