மனிதனுக்​கும் நாய்​களுக்​கு​மான பாசப்​பிணைப்​பைச் சொல்​லும் ‘சிங்கா’

மனிதனுக்​கும் நாய்​களுக்​கு​மான பாசப்​பிணைப்​பைச் சொல்​லும் ‘சிங்கா’
Updated on
1 min read

அறி​முக இயக்​குநர் ராஜ துரைசிங்​கம் இயக்​கி​யுள்ள படம், ‘சிங்கா’. கயல் சந்​திரன் கதா​நாயக​னாக நடித்​துள்​ளார்.

சிஜா ரோஸ், மீனாட்சி ரவீந்​திரன் கதா​நாயகி​களாக நடித்துள்ளனர். ஆதித்யா கதிர் மற்​றும் மலை​யாள நடிகர் அரிஸ்டோ சுரேஷ் உள்​ளிட்​டோர் நடித்​துள்​ளனர். ருத்​ரம் சினிமாஸ் மற்​றும் எஸ்​.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்​கும் இப்படத்​துக்கு மனோஜ் சின்​னசு​வாமி இசை அமைத்​துள்​ளார். அசோக் குமார் ராஜ் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இந்​தப் படத்​தின் டீஸர் வெளி​யாகி கவனம் பெற்​றுள்​ளது.

“சிங்கா என்​பது ஒரு லாப்​ர​டார் நாய். தனது அழகான தோற்றத்தாலும், உணர்ச்சி மிகுந்த வெளிப்​பாட்​டாலும் இது ரசிகர்களின் மனங்​களை ஈர்க்​கும். மனிதர்​களுக்​கும் நாய்களுக்கும் இடையே இருக்​கும் பாசப்​பிணைப்பை மையமாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள இந்​தப் படம், அனைத்து வயதினரை​யும் கவரும் வகையில் இருக்​கும்” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது. இப்​படம் விரை​வில் வெளி​யாக உள்​ளது.

மனிதனுக்​கும் நாய்​களுக்​கு​மான பாசப்​பிணைப்​பைச் சொல்​லும் ‘சிங்கா’
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in