ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ அக்.2-ல் ரிலீஸ்!

ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ அக்.2-ல் ரிலீஸ்!
Updated on
1 min read

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீடு குறித்து லைகா புரொடெக்‌ஷன்ஸ், ஜேசன் சஞ்சய் தங்களின் எக்ஸ் தள பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளனர். அதில், ‘அக்டோபர் 2-ம் தேதி கொள்ளைக்கான நாளாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அன்று ‘சிக்மா’ திரையரங்குகளில் ஜொலிக்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளனர்.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த ஆக் ஷன் அட்​வென்​சர் காமெடி படத்​தில் ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், அன்​பு​தாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்​டா, மகாலட்​சுமி சுதர்​சனன் மற்றும் பலர் நடித்​துள்​ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்​படத்​துக்​குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்​ப​திவு செய்துள்ளார். 

முன்னதாக ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. தற்போது படம் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ அக்.2-ல் ரிலீஸ்!
​சாந்தனு - சீமான் நடிக்​கும் ‘ஒரு கைதி​யின் டைரி’ மோஷன் போஸ்டர் வெளி​யீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in