​சாந்தனு - சீமான் நடிக்​கும் ‘ஒரு கைதி​யின் டைரி’ மோஷன் போஸ்டர் வெளி​யீடு

​சாந்தனு - சீமான் நடிக்​கும் ‘ஒரு கைதி​யின் டைரி’ மோஷன் போஸ்டர் வெளி​யீடு
Updated on
1 min read

சாந்தனு - சீமான் இணைந்து நடிக்​கும் படத்​துக்கு ‘ஒரு கைதியின் டைரி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். மதுரை பின்​னணி​யில் அப்பா – மகன் உறவை மைய​மாகக் கொண்ட இப்​படத்தை சுசீந்திரன் இயக்​கு​கிறார்.

சாம் சி எஸ் இசையமைக்​கிறார். இப்​படத்தை கேஆர்ஜி நிறு​வனம் சார்​பில் கண்​ணன் ரவி, தீபக் ரவி இணைந்து தயாரிக்​கின்​றனர். இந்​நிறு​வனம் தயாரிக்​கும் 10 -வது படம் இது.

இப்​படத்​தின் மோஷன் போஸ்​டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்​ளார். “குடும்ப உறவு​களின் உணர்​வு​களு​டன் ஆக் ஷன் மற்​றும் விறு​விறுப்​பான சம்​பவங்​களும் இணைந்த கதைக்கள​மாக இப்​படம் அமைய உள்​ளது. இதன் படப்​பிடிப்பை ஒரே கட்​ட​மாக முடிக்கத் திட்​ட​மிட்​டுள்​ளோம்” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

பார​தி​ராஜா இயக்​கத்​தில் கமல், ரேவ​தி, ராதா நடித்து 1985-ம் ஆண்​டு வெளி​யாகி ஹிட்​டான படம் ‘ஒரு கைதி​யின் டைரி’. பாக்யராஜ் இதன் கதையை எழு​தி​யிருந்​தார். இந்த படத்தை அமிதாப்​பச்​சன் நடிப்​பில் இந்​தி​யில் ரீமேக் செய்து இயக்​கி​னார் கே.பாக்​ய​ராஜ். அந்​தப் படங்​களுக்​கும் இந்த ‘ஒரு கைதி​யின் டைரி’ படத்​துக்​கும் தொடர்​பில்லை என்​றும் படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

​சாந்தனு - சீமான் நடிக்​கும் ‘ஒரு கைதி​யின் டைரி’ மோஷன் போஸ்டர் வெளி​யீடு
“மனைவி ரசிக்க மாட்டார்” – ‘டாக்ஸிக்’ பட காட்சிகள் குறித்து மனம் திறந்த யஷ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in