அபிஷன் படத்தில் சிவராஜ்குமார்

அபிஷன் படத்தில் சிவராஜ்குமார்
Updated on
1 min read

‘ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களைத் தொடர்ந்து நேரடித் தமிழ்ப் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களை ஒப்புக் கொண்டு நடிக்கத் தொடங்கியிருக்கிறார் சிவராஜ் குமார்.

கன்னட சினிமாவின் ‘ஹாட்ரிக் ஸ்டார்’ என்று புகழப்படும் அவரைத் தன்னுடைய கதையால் மயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன்‌.

‘டூரிஸ்ட் ஃபேமிலி' வெற்றிப் படத்தை இயக்கி, நடிகராகவும் அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் அடுத்து 'வித் லவ்' படத்தில் நாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அபிஷன் நாயகனாக நடிக்கும் இந்த இரண்டாவது படத்தில்தான் சிவாராஜ்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தின் மூலம், தெலுங்குப் படவுலகில் பிரபலமாகியுள்ள ஷிவானி நகரம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

டிராமா கம்பெனி என்கிற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இப்படத்தைத் தயாரிப்பவர் அ.பாலமுருகன். சிவராஜ்குமார், அபிஷன், ஷிவானி ஆகியோருடன், ‘ஹார்ட் பீட்', ‘டூரிஸ்ட் ஃபேமிலி' படங்களின் மூலம் புகழ்பெற்ற யோகலட்சுமி, கானா வினோத், சங்கீதா மாதவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

லியோன் ஜேம்ஸ் இசையமைக்க பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

அபிஷன் படத்தில் சிவராஜ்குமார்
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19
அபிஷன் படத்தில் சிவராஜ்குமார்
‘காப்பி’யடிப்பது ஒரு போதை! | சுட்ட கதை 32

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in