’சேயோன்’ அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் கமல்ஹாசன்?

’சேயோன்’ அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் கமல்ஹாசன்?
Updated on
1 min read

’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் உடன் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை முடித்துவிட்டு ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரியவுள்ளார்.

தற்போது இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்தப் படத்தில் முருகன் மற்றும் விருமாண்டி ஆகிய இரண்டு கடவுள்களை மையப்படுத்தி கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சிவகுமார் முருகேசன். இதில் முருகக் கடவுளை மையப்படுத்தி சிவகார்த்திகேயனும், விருமாண்டி கடவுளை மையப்படுத்தி கமலும் இருப்பார்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கமல் - சிவகார்த்திகேயன் இணைந்து நடித்தால் இப்படத்தில் வியாபாரம் உள்ளிட்டவை இரட்டிப்பாக இருக்கும். மேலும், இப்போதே இதன் உரிமைகளை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோவில், அக்டோபரில் வெளியீடு என படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

’சேயோன்’ அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் கமல்ஹாசன்?
அன்று ஏவுகணை தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய மொஜ்தபா காமேனி - என்ன நடந்தது?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in