கேஃபர்: ஒளிப்​ப​தி​வாளரின் வலது கரம்| ஒளி என்பது வெளிச்சமல்ல 44

கேஃபர்: ஒளிப்​ப​தி​வாளரின் வலது கரம்| ஒளி என்பது வெளிச்சமல்ல 44
Updated on
3 min read

திரைப்​படத்​தில் ஒரு காட்​சி​யின் வெற்றி என்​பது பெரும்​பாலும் ஒளியமைப்​பைச் சார்ந்​துள்​ளது. கதா​பாத்​திரத்​தின் முகத்​தில் விழும் ஒளி, ஓர் அறை​யின் சூழல், சூரிய உதயத்​தின் உணர்​வு, மழை இரவின் மர்​மம் அல்​லது போர்க்​களத்​தின் பதற்​றம்​ - இவை அனைத்​தை​யும் நடை​முறை​யில் உரு​வாக்​கும் நபர்​தான் கேஃபர் (Gaffer).

திரைப்​படத் துறை​யில் கேஃபர் என்​பவர், லைட் டெக்​னீஷியன் மட்​டுமல்ல. அவர் தலைமை ஒளியமைப்பு நிபுண​ரா​வார் (Chief Lighting Technician). ஒளிப்​ப​தி​வாளரின் கலைக் கற்​பனையை நடை​முறைப்​படுத்​தும் முக்​கிய​மான தொழில்​நுட்​பக் கலைஞர். கேம​ரா, ஒளியை பதிவு செய்​கிறது; ஆனால் அந்த ஒளியை உரு​வாக்​கும் பொறுப்பு கேஃபருடையது.

கேஃபர் யார்?

“இந்​தக் காட்சி மாலை சூரிய ஒளியைப் போல இருக்க வேண்​டும்” என்றோ அல்​லது ‘இங்கே கதா​பாத்​திரம் தனிமை​யாக உணரப்பட வேண்​டும்’ என்றோ ஒளிப்​ப​தி​வாளர் சொல்​லும்​போது,அந்த உணர்வை உரு​வாக்க, எந்த ஒளி​விளக்​கைப் பயன்​படுத்த வேண்​டும்​? அதனை எவ்​வளவு உயரத்​தில் வைக்க வேண்​டும்? எந்த கோணத்​தில் ஒளியை செலுத்த வேண்​டும்? எவ்​வளவு மின்​சா​ரம் தேவைப்​படும்? எந்த டிஃப்​யூஷன் பயன்​படுத்த வேண்​டும்? என்​பது அனைத்​தை​யும் முடிவு செய்​வது கேஃபரின் பணி.

அதனால்​தான் திரை​யுல​கில் கேஃபர், ஒளிப்​ப​தி​வாளரின் வலது கரம் என்று அழைக்​கப்​படு​கிறார்.

கேஃபர் ஆக எப்​படி உரு​வாகிறார்​கள்?

திரைப்​படப் பள்​ளி​களில் “கேஃபர்” என்ற பட்​டப்​படிப்பு பொது​வாகக் கிடை​யாது. பெரும்​பாலான கேஃபர்​கள் தங்​கள் வாழ்க்​கையை கீழ்​மட்​டப் பணி​களில் இருந்து தொடங்​கு​கிறார்​கள். லைட்​மேன்- விளக்​கு​களைத் தூக்​கிச் சுமந்து செல்​லுதல், ஸ்டாண்​டு​களை அமைத்​தல், கேபிள்​களை இழுத்​தல் போன்ற அடிப்​படைப் பணி​களில் முதலில் அனுபவம் பெறு​வார்​கள்.

லைட்​டிங் டெக்​னீஷியன்- அதன் பின்​னர் விளக்​கு​கள், மின் விநி​யோகம், டிம்​மர்​கள், ஜெனரேட்​டர்​கள் மற்​றும் ஒளி வடிவ​மைப்பு பற்​றிய தொழில்​நுட்ப அறிவைப் பெறு​வார்​கள். பெஸ்ட் பாய் எலக்ட்​ரிக்- கேஃபரின் முக்​கிய உதவி​யாள​ராகச் செயல்​படு​வார்​கள்.

பல வருட அனுபவத்​துக்​குப் பிறகு கேஃபர், முழு லைட்​டிங் துறையை​யும் நிர்​வகிக்​கும் நிலைக்கு உயர்​வார்​கள். புகழ்​பெற்ற பல ஒளிப்​ப​தி​வாளர்​களும் தங்​கள் வாழ்க்​கையை லைட்​டிங் பிரி​வில் தொடங்கி பின்​னர் ஒளிப்​ப​தி​வாளர்​களாக வளர்ந்​துள்​ளனர்.

ஒளிப்​ப​தி​வாள​ரும் கேஃபரும்

ஒளிப்​ப​தி​வாள​ருக்​கும் கேஃபருக்​கும் இடையே தனித்​து​வ​மான புரிதல் இருக்​கும். ஒளிப்​ப​தி​வாளர், காட்​சி​யின் உணர்வை விவரிப்​பார். ஒளி​யின் தரத்தை (Light Quality) பற்​றிக் கூறு​வார். நிழல்​களின் தன்​மையை விளக்​கு​வார்.

கேஃபர், சரி​யான ஒளி​விளக்​கு​களைத் தேர்வு செய்​வார். ஒளி​யின் திசையை நிர்​ண​யிப்​பார். மின் விநி​யோகத்தை ஏற்​பாடு செய்​வார், லைட்​டிங் குழுவை வழிநடத்​து​வார். அனுபவ​மிக்க கேஃபர் பல நேரங்​களில், ஒளிப்​ப​தி​வாளர் சொல்​லும் முன்பே அவருடைய எண்​ணத்​தைப் புரிந்​து​கொள்​வார்.

கேஃபரின் தொழில்​நுட்ப அறிவு

ஒரு சிறந்த கேஃபருக்கு விளக்​கு​களை இயக்​கத் தெரிந்​தால் மட்​டும் போதாது. எச்​.எம்.ஐ விளக்​கு​கள், டங்​ஸ்​டன் விளக்​கு​கள், எல்​.இ.டி விளக்​கு​கள், ஸ்கைபேனல், க்ரீம்​சோர்​ஸ், அஸ்​டேரா டியூப்​ஸ், பலூன் லைட்​கள், டிஎம்​.எக்ஸ் கட்​டுப்​பாடு, ஜெனரேட்​டர் திறன், மின் விநி​யோகம், ஒளி​யின் இயல்​பு, நிற வெப்​பநிலை, பாது​காப்பு நடை​முறை​கள், லைட்​டிங் வரைபடங்​கள், நவீன எல்​.இ.டி அமைப்​பு​கள் போன்ற பல தொழில்​நுட்ப அம்​சங்​கள் குறித்​தும் அவருக்​குத் தெரிந்​திருக்க வேண்​டியது அவசி​யம்.

லொக்​கேஷன் ஸ்க​வுட்​டிங்​கில் கேஃபரின் பங்கு படப்​பிடிப்​புக்கு முன்பே கேஃபர் லொக்​கேஷன்​களை ஆய்வு செய்​வார். ஒளி வரும் திசை எது? எந்த நேரத்​தில் நிழல் விழுகிறது? மின்​சா​ரம் கிடைக்​கு​மா? ஜெனரேட்​டர் தேவைப்​படு​மா? கிரேன் லைட்​கள் அமைக்க இடம் இருக்​கிற​தா? போன்ற அம்​சங்​களை அவர் கவனிப்​பார்.

இதனால் படப்​பிடிப்பு நாளில் ஏற்​படக்​கூடிய சிக்​கல்​கள் முன்​கூட்​டியே தீர்க்​கப்​படு​கின்​றன. கலை உணர்வு கொண்ட தொழில்​நுட்ப நிபுணர் கேஃபர் ஒரு மின் தொழிலாளி அல்ல. அவருக்கு கலை உணர்​வும் அவசி​யம்.

காதல் காட்​சிகளுக்கு - மென்​மை​யான ஒளி, வெப்​ப​மான நிற வெப்​பநிலை மற்​றும் குறைந்த நிழல்​கள், த்ரில்​லர் காட்​சிகளில்- ஆழமான நிழல்​கள், கடின​மான ஒளி மற்​றும் அதிக கான்ட்​ராஸ்ட். ஹாரர் காட்​சிகளுக்கு – பின்​னொளி, மர்​ம​மான நிழல்​கள் மற்​றும் ஒற்றை ஒளி மூலங்​கள். இத்​தகைய உணர்​வு​களை நடை​முறை​யில் உரு​வாக்​கும் திறமை கேஃபருக்கு இருக்க வேண்​டும்.

இந்​திய சினி​மா​வில் கேஃபர்​களின் பங்கு

பழைய காலங்​களில் கார்​பன் ஆர்க் விளக்​கு​கள் பயன்​படுத்​தப்​பட்ட காலம் முதல் இன்று எல்​.இ.டி மற்​றும் வயர்​லெஸ் கட்​டுப்​பாட்டு அமைப்​பு​கள் வரை கேஃபர்​கள் தொழில்​நுட்ப மாற்​றங்​களோடு வளர்ந்​துள்​ளனர்.

பி.சி.​ராம், சந்​தோஷ் சிவன், ரவி கே. சந்​திரன், திரு, ரத்​னவேலு போன்ற முன்​னணி ஒளிப்​ப​தி​வாளர்​களின் காட்​சிகள் வெற்றி பெறு​வதற்கு பின்​னால் திறமை​யான கேஃபர்​களின் உழைப்​பும் உள்​ளது.

கேஃபரின் மதிப்​பும் ஊதி​ய​மும்

திரைப்​படத் துறை​யில் கேஃபர் மிக​வும் உயர்ந்த திறன் கொண்ட தொழில்​நுட்ப நிபுணர். பல பெரிய திரைப்​படங்​களில் 20 முதல் 50 பேர் கொண்ட லைட்​டிங் குழுவை ஒருங்​கிணைத்து வழிநடத்​தும் பொறுப்​பை​யும் அவர் ஏற்​கிறார். இதன் காரண​மாக அனுபவ​மிக்க கேஃபர்​களின் ஊதி​யம் மிக​வும் உயர்​வாக இருக்​கும்.

சில நேரங்​களில் அவர்​கள் பல மூத்த தொழில்​நுட்​பக் கலைஞர்களை​யும்​ விட அதிக ஊதி​யம் பெறுகின்​றனர். ஹாலிவுட்​டிலும் பெரிய இந்​தி​யத் திரைப்​படங்​களி​லும், ஒரு முன்​னணி கேஃபர் தயாரிப்​பாளர்​களால் மிக​வும் மதிக்​கப்​படு​கிறார்.

பல ஒளிப்​ப​தி​வாளர்​கள் ஒரு திரைப்​படத்​துக்கு ஒப்​புக்​கொள்​ளும் முன், கேஃபர் யார் என்​பதை உறு​திப்​படுத்​திக் கொள்​வார்​கள். ஏனெனில், அவர்​களின் கற்​பனையை நம்​பிக்​கை​யுடன் செயல்​படுத்​தும் நபர் கேஃபர்​தான்.

பாது​காப்​பின் காவலர்

ஒரு திரைப்​படத் தளத்​தில் ஆயிரக்​கணக்​கான வாட்ஸ் மின்​சா​ரம் பயன்​படுத்​தப்​படு​கிறது. கேபிள்​கள் பாது​காப்​பாக அமைக்​கப்பட வேண்​டும், மழை​யில் மின் கசிவு ஏற்​படக்​கூ​டாது.

ஜெனரேட்​டர்​கள் சரி​யாக இயங்க வேண்​டும். தொழில்​நுட்​பக் குழு​வினர் பாது​காப்​பாக இருக்க வேண்​டும். இவற்றை எல்​லாம் கேஃபர் உறுதி செய்​வார். பெரிய படப்​பிடிப்​புத் தளங்​களில் பாது​காப்பு என்​பது கேஃபரின் முக்​கிய பொறுப்​பு​களில் ஒன்​றாகும்.

ஒளி​யின் ஆர்க்​கிடெக்ட்

ஒளிப்​ப​தி​வாளர், ஒரு காட்​சியை கற்​பனை செய்​கிறார். அந்​தக் கற்​பனையை விளக்​கு​களாக, நிழல்​களாக, ஒளிக்​கற்​றை​களாக, உணர்​வு​களாக மாற்​று​வது கேஃபர். நல்ல கேஃபர் இல்​லாமல் ஒரு பெரிய ஒளிப்​ப​தி​வாளர் முழு​மையடைய முடி​யாது.

காட்​சி​யின் அழகு, தொழில்​நுட்​பத் தரம், பாது​காப்​பு, வேகம் மற்​றும் செயல்​திறன் ஆகிய அனைத்​துக்கும் கேஃபர் ஒரு முக்​கிய காரணி​யாக இருக்​கிறார்.

அவர் திரை​யில் தோன்​று​வ​தில்​லை. அவரது பெயர் பெரும்​பாலும் பார்​வை​யாளர்​களுக்​குத் தெரி​யாது. ஆனால் ஒவ்​வொரு அழகான ஒளியமைப்​பிற்​குப்​ பின்​னாலும்​ அவரது அனுபவ​மும்​, உழைப்​பும்​ கலை உணர்​வும்​ மறைந்​திருக்​கிறது.

(புதன்​ தோறும்​ ஒளி​காட்​டுவோம்​)

- cjrdop@gmail.com

கேஃபர்: ஒளிப்​ப​தி​வாளரின் வலது கரம்| ஒளி என்பது வெளிச்சமல்ல 44
ஃபோகஸ் புல்லர்: கண்ணுக்குத் தெரியாத கலைஞர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 43

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in