பேட்மிண்டன் விளை​யாட்டு பின்னணி​யில் ‘ரீமேட்ச்’

பேட்மிண்டன் விளை​யாட்டு பின்னணி​யில் ‘ரீமேட்ச்’
Updated on
1 min read

பேட்மிண்​டனை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் காதல் கலந்த விளை​யாட்டு படத்​துக்கு ‘ரீமேட்ச்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்​ளது. இதில் கேபிஒய் பாலா கதா​நாயக​னாக நடித்துள்​ளார்.

தானு ஹர்ஷா கதா​நாயகி​யாக தமிழில் அறி​முக​மாகிறார். இவர் சிறந்த பேட்​மிண்​டன் வீராங்​க​னை. முக்​கிய கதா​பாத்​திரங்​களில் இளவரசு, சந்​தோஷ் பிர​தாப், ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், செல் முரு​கன் உள்​ளிட்ட பலர் நடிக்​கிறார்​கள். அச்சு ராஜாமணி இசை அமைக்​கிறார்.

அர்வி ஒளிப்​ப​திவு செய்​கிறார். இயக்​குநர் ராதா மோக​னிடம் இணை இயக்​குந​ராக பணி​யாற்​றிய ஆர்​.​விமல் குமார் எழுதி இயக்​கு​கிறார். ஸினிமா மீடியா அண்ட் என்​டர்​டெ​யின்​மென்ட் நிறு​வனத்​தின் தினேஷ்​ராஜ், பிர​காஷ் சேஷாத்​ரி, ஜி. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்​கின்​றனர். இதன் தொடக்க விழா சென்​னை​யில் நடை பெற்​றது.

கலைப்​புலி எஸ். தாணு, நடிகை மீனா, அருள்​ப​தி, இயக்​குநர்​கள் சசி, ராதா மோகன், ஆர்.கண்ணன், மகேஷ் ராஜேந்​திரன், நடிகர் கதிர் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

பேட்மிண்டன் விளை​யாட்டு பின்னணி​யில் ‘ரீமேட்ச்’
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in