‘தர்மன்’ படப்பிடிப்பில் நடிகை ராஷி கன்னாவுக்கு ஆன்மிக புத்தகம் பரிசளித்த ரஜினி

‘தர்மன்’ படப்பிடிப்பில் நடிகை ராஷி கன்னாவுக்கு ஆன்மிக புத்தகம் பரிசளித்த ரஜினி
Updated on
1 min read

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் தனக்குப் பரிசளித்த ‘லிவிங் வித் த ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ என்ற ஆன்மிகப் புத்தகம் தனது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா ? என்று ரஜினி கேட்டார். இல்லை என்றேன். 2 நாட்களுக்குப் பிறகு, அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கி வந்து எனக்குப் பரிசளித்தார். கடந்த சில வாரங்களாக அதை ஆர்வத்துடன் படித்து வருகிறேன். ‘புத்தகத்தைப் பற்றி நான் உன்னிடம் கேள்வி கேட்பேன்’ என்றும் அவர் சிரித்தபடி கூறினார்.

அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் என்னைச் சிந்திக்க வைக்கின்றன. அந்தப் புத்தகத்தில் இருந்து மிக முக்கியமான வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக்கொண்டேன். நம்மில் பலருக்கு ஏன் தனிமை உணர்வு ஏற்படுகிறது என்பதற்கான பதிலை இந்தப் புத்தகம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. நாம் ஒரே இரவில் நம்மைத் தொலைத்துவிட்டோம் என்பதற்காக அல்ல, மாறாக வேறு யாரோ ஒருவராக மாறுவதற்காகப் பல வருடங்களைச் செலவழித்திருக்கிறோம் என்பதால்தான்.

அதனால் தான் அமைதி கூட இவ்வளவு சத்தமாக உணரப்படுகிறது. ஏனென்றால், எந்தவித கவனச் சிதறல்களும் இல்லாதபோது, இறுதியில் நம்மை நாமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில நேரங்களில் வளர்ச்சி என்பது நாம் போலியாக உருவாக்கிக்கொண்ட அடையாளங்களை விட்டுவிடுவதில்தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

‘தர்மன்’ படப்பிடிப்பில் நடிகை ராஷி கன்னாவுக்கு ஆன்மிக புத்தகம் பரிசளித்த ரஜினி
Chinna Chinna Aasai: என்று தணியும் லீலாக்களின் சுய தேடல்கள்?! | திரை தேவதைகள் 29

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in