‘டோரதி’ பற்றி ரஜினி சொன்ன அந்த வார்த்தை: கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி பதிவு

‘டோரதி’ பற்றி ரஜினி சொன்ன அந்த வார்த்தை: கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி பதிவு
Updated on: 
1 min read

“அந்த உரையாடலையும் அவர் சொன்ன வார்த்தைகளையும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்” என ‘டோரதி’ படத்தை ரஜினி பாராட்டியது குறித்து கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் இசையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘டோரதி’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்று வரும் இந்தப் படத்தை திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ரஜினிகாந்த் ‘டோரதி’ படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ், ரிஷிகாந்த், சனந்த்தை அழைத்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

தனக்கு மிகவும் விருப்பமான நடிகரின் பாராட்டு குறித்தும், சந்திப்பு குறித்தும் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவர் அப்பதிவில், ‘தலைவா..., அற்புதம், அழகு, அசத்தல்.

தலைவருக்கு ‘டோரதி’ படம் பிடித்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு அம்சங்களையும் பாராட்டி ஒரு மணி நேரம் விரிவாக பேசினார். இதைவிட வேறென்ன வேண்டும். அந்த உரையாடலையும் அவர் சொன்ன வார்த்தைகளையும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்.

“இந்த கார்த்திக் சுப்புராஜை தான் தேடிட்டு இருந்தேன்” இந்த வார்த்தைகளில் நான் பறக்கிறேன். லவ் யூ தலைவா’ எனத் தெரிவித்துள்ளார்.         

அதேபோல், நடிகர் சனந்த்தும் ரஜினி பாராட்டியது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘அவார்டு கன்ஃபர்ம். என்ன ஒரு சேலஞ்சிங்கான ரோல். ஹேட்ஸ் ஆஃப். செம அழகா இருந்தீங்க. ‘பேட்ட’-ல பார்த்த அன்வரா இது?!’ என ரஜினியின் பாராட்டைப் பதிவிட்டு, ‘ரொம்ப நன்றி தலைவா. லவ் யூ தலைவா’ எனத் தெரிவித்துள்ளார்.

ரிஷிகாந்தும், சனந்த்தும் ‘பேட்ட’ மற்றும் ‘கூலி’ படங்களில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தனர்.  

‘டோரதி’ பற்றி ரஜினி சொன்ன அந்த வார்த்தை: கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி பதிவு
‘டோரதி’யில் வில்லனாக நடித்தது ஏன்? - சவுந்தர ராஜா விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in