“போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள்” - இளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை

ரஜினிகாந்த் | கோப்புப் படம்

ரஜினிகாந்த் | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ரஜினி​காந்த் நடிக்​கும் ‘ஜெ​யிலர்​-2’ படத்​தின் படப்​பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் நடந்து வரு​கிறது. இதில் பங்​கேற்ற ரஜினி​காந்த் நேற்று விமானம் மூலம் சென்னை திரும்​பி​னார்.

விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ‘ஜெ​யிலர்​-2’ படத்​தின் படப்​பிடிப்பு இன்​னும் 2 நாட்​கள் உள்​ளது. கமலுடன் நான் இணைந்து நடிக்​கும் படத்​தின் படப்​பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்​கு​கிறது.

இளைஞர்​கள் ரொம்ப ஜாக்​கிரதை​யாக இருக்க வேண்​டும். ஆர்​வக் கோளாறில் நடிகர்​களின் பின்​னால் செல்​கின்​றனர். அப்​படி செல்​லும்​போது அடிபட்​டால், அவர்​களுக்​கு​தான் காயம் ஏற்​படும். படிக்​கும் வயதில், படிப்​பில் மட்​டுமே கவனம் செலுத்த வேண்​டும். சிந்​தனை, செயல் முழு​வதும் படிப்​பில்​தான் இருக்க வேண்​டும். அந்த நேரத்தை தவற விட்​டு​விட்​டால், வாழ்க்கை முழு​வதும் கஷ்டப்பட வேண்​டிய நிலை ஏற்​படும்.

முக்​கிய​மாக, இளைஞர்​கள் தங்​கள் உடல்​நலம், ஆரோக்​கி​யத்​தைப் பார்த்து கொள்ள வேண்​டும். மது, கஞ்சா என போதைப் பழக்​கத்​துக்கு அடிமை​யா​காதீர்​கள். அதில் சென்​றால் வாழ்க்கை கெட்​டுப்போய்​விடும். நீங்​கள் மட்​டுமின்​றி, உங்​கள் தாய், தந்தை என ஒட்​டுமொத்த குடும்​பத்​தின் வாழ்க்​கை​யும் நரக​மாகி​விடும். அது​போன்ற நண்​பர்​களின் அரு​கில்​கூட சென்று விடாதீர்​கள் என்று அவர் கூறி​னார்​.

<div class="paragraphs"><p>ரஜினிகாந்த் | கோப்புப் படம்</p></div>
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in