காமெடி படமாக உரு​வாகும் ‘ஊருக்கு ரெண்டு ஊதா​ரி’

காமெடி படமாக உரு​வாகும் ‘ஊருக்கு ரெண்டு ஊதா​ரி’
Updated on
1 min read

பிரஜின் - புகழ் இணைந்து நடிக்​கும் படத்​துக்கு ‘ஊருக்கு ரெண்டு ஊதா​ரி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இந்த காமெடி படத்தை யோகேஸ்​வரன் மைனர் இயக்​கு​கிறார். ஏஆர்கே புரொடக் ஷன்ஸ் சார்​பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம், வினோத் பெரு​மாள் இணைந்து தயாரிக்​கும் இப்​படத்​தில் ஜனனி நாயகி​யாக நடிக்​கிறார்.

விக்​ரம் விஜய், ரவிமரி​யா, மைம்​கோபி, தீபா, அபிதா உள்ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்கின்றனர். காந்த் தேவா இசையமைக்​கும் இப்படத்துக்கு ராஜா பட்​டா​சார்ஜி ஒளிப்​ப​திவு செய்​கிறார். படம் பற்றி இயக்​குநர் யோகேஸ்​வரன் மைனர் கூறும்​போது, “இது காமெடி ட்ரா​மா​வாக உரு​வாகும் படம்.

பொது​வாகவே ஊருக்கு 2 ஊதாரி இருப்​பார்​கள். ஆனால் ஒரே வீட்​டில் 2 ஊதாரி இருந்​தால் என்ன நடக்​கும் என்பதை வைத்து சுவாரஸிய​மான காமெடி படமாக உருவாக்​கு​கிறோம்” என்​றார். இப்படத்​தின் தொடக்​க​விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. விஜய் சேதுப​தி, சுப்​ரமணி​யசி​வா, நாத், சவுந்​தர்​ராஜா, கஞ்சா கருப்​பு, தயாரிப்​பாளர்​கள் சுரேஷ் காமாட்​சி, சி.​வி.கு​மார், கே.ரமேஷ் பாண்​டியன் கலந்​து​கொண்டு தொடங்கி வைத்​தனர்.

காமெடி படமாக உரு​வாகும் ‘ஊருக்கு ரெண்டு ஊதா​ரி’
Sarvam Maya: நிவின் பாலியின் ஃபீல் குட் கவிதை | ஓடிடி திரை அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in