ஸ்ருதிஹாசன் படத்துக்கு புதுமுகம் இசை!

ஸ்ருதிஹாசன் படத்துக்கு புதுமுகம் இசை!
Updated on: 
1 min read

நடிகை ஸ்ருதிஹாசனின் அடுத்து நடிக்க இருக்கும் படத்துக்கு அறிமுக இசையமைப்பாளர் வருண் முரளி இசையமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அஸ்வின்ஸ் படத்தை இயக்கிய தருண் தேஜா இயக்கத்தில் அடுத்ததாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ‘மாவீரன்’, ‘3BHK’ படங்களைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் தயாரிகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.

இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இந்த தகவலை சாந்தி டாக்கீஸ் அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில், ‘சென்னையின் மேடைகள், வீதிகளில் இருந்து வெள்ளித்திரை வரை. ஸ்ருதிஹாசன் x சாந்தி டாக்கீஸ் படத்துக்கான இசையமைப்பாளராக திறமையான வருண் முரளியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்’ என்ற தெரிவித்துள்ளது.

இத்துடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வருண் முரளி,  “இசையமைப்பாளராக இது எனக்கு முதல் படம். எனக்கு உங்களின் ஆதரவு நிச்சயம் வேண்டும். நான் என்னால் முடிந்த சிறந்த இசையை கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள துல்கர் சல்மானின் ‘ஆகாஸம்லோ ஒக தாரா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரதில் நடித்திருக்கிறார்.

ஸ்ருதிஹாசன் படத்துக்கு புதுமுகம் இசை!
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருது: ‘டூன் 3’, ‘தி ஒடிஸி’யுடன் போட்டியிடும் ‘ராமாயணா’

X