சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருது: ‘டூன் 3’, ‘தி ஒடிஸி’யுடன் போட்டியிடும் ‘ராமாயணா’

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருது: ‘டூன் 3’, ‘தி ஒடிஸி’யுடன் போட்டியிடும் ‘ராமாயணா’
Updated on: 
1 min read

நிதேஷ் திவாரி இயக்​கி​யுள்ள ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ திரைப்​படம், 99-வது ஆஸ்​கர் விருதுகளின் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவுக்​கான பட்​டியலில் இடம்​பி​டித்​துள்​ளது.

இப்​படத்​தில், ரன்​பீர் கபூர் ராம​ராகவும் சாய் பல்​லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்​துள்​ளனர். 2 பாக​மாக உரு​வாகி​யுள்ள இதன் முதல் பாகம், நவ.5-ம் தேதி வெளியானது. ஆங்​கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உட்​பட பல்​வேறு மொழிகளில் உரு​வாகி​யுள்ள இப்​படம் வசூலில் சாதனை படைத்து வரு​கிறது. ஏ.ஆர்.ரஹ்​மான் மற்​றும் ஹான்ஸ் ஜிம்​மர் இசை அமைத்​துள்ள இப்​படம் வெளியான 20 நாட்​களில் உல​கம் முழு வதும் ரூ.1,750 கோடி வரை வசூலித்து ஓடிக்​கொண்​டிருக்​கிறது. இன்​னும் அதிக வசூல் சாதனைப் படைக்​கும் என்று கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் இப்​படம் 84-வது கோல்​டன் குளோப் விருது போட்​டிக்​கான தகுதிப் பட்​டியலில் அதி​காரப்​பூர்​வ​மாக இடம்​பெற்​றுள்​ளது. சிறந்த திரைப்​படம் (டிராமா) மற்​றும் ஆங்​கிலம் அல்​லாத பிறமொழியில் சிறந்த திரைப்​படம் ஆகிய இரு பிரிவு​களில் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, 99-வது ஆஸ்​கர் விருதுகளுக்​கான விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரி​வில் முதல் 20 இடங்​களுக்​குள் ‘ராமாயணா’ நுழைந்​துள்​ளது. ‘டூன்: பார்ட் 3’, கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’, மார்​வெலின் ‘அவெஞ்​சர்ஸ்: டூம்​ஸ்டே’ ஆகிய பிரம்​மாண்​டத் திரைப்​படங்​களு​டன் ‘ராமாயணா’வும் போட்​டி​யிடு​கிறது.

ஆஸ்​கர் தகுதிப்​பட்​டியலில் ‘கோந்​தல்’: இதற்​கிடையே ஆஸ்கரின், சிறந்த சர்​வ​தேசப் படப்​பி​ரிவுக்கு இந்​தியா சார்​பில் அதி​காரப்​பூர்​வ​மாக அனுப்​பப்​பட்​டுள்ள ‘கோந்​தல்’ திரைப்படம், தகுதிப்​பட்​டியலில் இடம் பிடித்​துள்​ளது. சந்​தோஷ் தவக்​கர் இயக்​கிய மராத்​தி​யப் பட​மான ‘கோந்​தல்’ கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி கவனம் பெற்​றது.

இப்​படத்​துக்கு இளை​யராஜா இசை அமைத்​துள்​ளார். இதில் இஷிதா தேஷ்​முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹோனி, நிஷாத் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். மற்​றொரு இந்​திய பட​மான ‘அங்’ திரைப்​படமும் தேர்​வாகி​யுள்​ள​தாக ஆஸ்​கர் அமைப்பு அறி​வித்​துள்​ளது.

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருது: ‘டூன் 3’, ‘தி ஒடிஸி’யுடன் போட்டியிடும் ‘ராமாயணா’
கிராபிக்ஸ் பணிகள் தாமதம்: தள்ளிப் போகிறதா ‘வாரணாசி’ ரிலீஸ்?

X