‘கான் சிட்டி’ டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய ஃநெட்ப்ளிக்ஸ்

‘கான் சிட்டி’ டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய ஃநெட்ப்ளிக்ஸ்
Updated on
1 min read

‘கான் சிட்டி’ படத்தின் டிஜிட்டல் உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கான் சிட்டி’. இதன் அறிமுக டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இதன் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகைக்கு கைப்பற்றியிருக்கிறது. திரையரங்க வெளியீடு இன்னும் முடிவாகாத சமயத்தில் நடைபெற்றுள்ள இந்த விற்பனை படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நடக்கும் கதை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பணம் அச்சிடும் மிஷினைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் விஸ்வநாதன், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், எடிட்டராக அருள் மோசஸ் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை துவங்கவுள்ளது படக்குழு.

‘கான் சிட்டி’ டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய ஃநெட்ப்ளிக்ஸ்
தங்கம், வெள்ளி விலை சற்றே உயர்வு: இன்றைய சந்தை நிலவரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in