“ரசிகர்களின் ஆத்மாவாக மாறியிருக்கிறது என் இசை!” - இளையராஜா பெருமிதம்

“ரசிகர்களின் ஆத்மாவாக மாறியிருக்கிறது என் இசை!” - இளையராஜா பெருமிதம்
Updated on
1 min read

இளையராஜா இசையமைப்​பாள​ராக அறி​முக​மான ‘அன்னக்கிளி’ திரைப்​படம் வெளி​யாகி 50 ஆண்​டு​களைக் கடந்​து​விட்​டது. இதையடுத்து அவருக்கு ரசிகர்​கள், திரை​யுல​கினர் வாழ்த்துகளைத் தெரி​வித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் சென்னை​யில் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த இளை​ய​ராஜா கூறியதாவது:

இப்​போது இயக்​குநர் பால்​கி, தமிழில் இயக்​கும் படத்​துக்கு இசை அமைத்​துக் கொண்​டிருக்​கிறேன். வருடம்​தான் போய்க் கொண்டிருக்​கிறதே தவிர, நான் எங்​கிருந்து எப்​படி வந்​தேனோ, அப்படியே தான் இருக்​கிறேன். எல்​லோரும் இசைக் கடவுளாக என்னைப் பார்ப்​பது பற்றி கேட்​கிறார்​கள். அது, அவர்​களின் அன்பைக் காட்​டு​கிறது. நான் இசையமைக்​கும்​போது என் மனதில் எந்த நினை​வும் இருக்​காது. வெறுமை​யாகவே இருக்​கும். கோயிலுக்​குப் போவதை விட இசை மிக​வும் புனித மானது.

அதனால் தான் மக்​கள் என்னை என்​னென்​னவோ சொல்​லிக் கொண்​டாடு​கிறார்​கள். நான் இல்​லாமல் போனாலும் அந்த கொண்​டாட்​டம் தொடரும் என்​பது எல்​லோருக்​கும் தெரி​யும். ‘அன்னக்​கிளி’ படத்​துக்கு இசை அமைத்த அனுபவம் பற்றி கேட்கிறீர்​கள். ஜி.கே.வெங்​கடேஷ் உள்​ளிட்ட பல இசையமைப்பாளர்​களிடம் நான் வாத்​தி​யங்​கள் வாசித்​துக் கொண்​டிருந்​தேன்.

சுமார் 250 படங்​களுக்கு மேல் பணிபுரிந்தாலும் எனக்​கென்று பட வாய்ப்பு வந்​த​போது, எப்​படிப் பாடலை தொடங்​கு​வது? என யோசித்​துப் பார்த்​தேன். மற்ற இசை அமைப்​பாளர்​களிடம் பணியாற்​றிய போது எனக்கு இப்​படியொரு எண்​ணம் வந்​ததே இல்​லை. ஆனால், எனக்​கென்று வந்​த​போது பல யோசனை​கள் வந்தது. என்னைத் தனிக்​காட்​டில் விட்ட மாதிரி இருந்​தது. ‘அன்னக்கிளி உன்ன தேடு​தே’ என பாடல் வரி​களை எழுதிவிட்டார்கள். பீச்​சில் நடந்து கொண்டே பாடலுக்​கான இசையை எப்​படித் தொடங்கலாம் என யோசித்​துக் கொண்டே இருந்​தேன்.

ஒரு பெண்​ணின் விரக​தாபத்தை இந்​தப் பாடல் சொல்​கிறது என்ற எண்​ணத்​தில், ஒரு ஹம்​மிங்கை வைத்​தேன். இதற்​காகப் பல நாட்கள் யோசித்​தேன். பிறகு எங்​கெங்கு ஷாட் வைக்​கப் போகிறார்​கள் என்று யோசித்து இசை அமைத்​தேன். ஒவ்​வொரு பாடலை​யும் இப்​படி இசை அமைத்​துக் கொடுத்​த​தால் தான் இன்றும் உயிரோடு இருக்​கிறது. ரசிகர்​களின் ஆத்​மா​வாக மாறியிருக்​கிறது. இவ்​வாறு இளை​ய​ராஜா கூறி​னார். இயக்குநர்கள் பால்​கி, கே.​பாக்​ய​ராஜ், பாடலாசிரியர் பா.​விஜய் உடன் இருந்​தனர்.

“ரசிகர்களின் ஆத்மாவாக மாறியிருக்கிறது என் இசை!” - இளையராஜா பெருமிதம்
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in