“அப்​பா​தான் என் முதல் சாய்ஸ்” - மனம் திறந்த ஜேசன் சஞ்​சய்

“அப்​பா​தான் என் முதல் சாய்ஸ்” - மனம் திறந்த ஜேசன் சஞ்​சய்
Updated on
1 min read

தமிழக முதல்​வரும் நடிகரு​மான விஜய்​யின் மகன் ஜேசன் சஞ்​சய், ‘சிக்​மா’ என்ற படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகிறார். சந்​தீப் கிஷன் நடிக்​கும் இந்​தப் படத்தை லைகா புரொடக் ஷன் தயாரித்துள்​ளது. சமீபத்​தில் வெளி​யான இந்​தப் படத்​தின் டிரெய்லர் ரசிகர்களை கவர்ந்​தது.

தமிழ், தெலுங்​கில் வெளி​யாகும் இப்​படம் ஜூலை 31-ல் வெளியாவ​தாக இருந்​தது. விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ வெளியானதால் இதன் ரிலீஸ் தள்ளி வைக்​கப்​பட்​டது. இந்நிலையில், தனது தந்தை விஜய் குறித்து மனம் திறந்து பேசியிருக்​கிறார் ஜேசன் சஞ்​சய். அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், “உங்​கள் தந்​தை​யிடம் இருந்து இப்​போது கற்​றுக்​கொள்ள வேண்டும் என்​றால் எதனை கற்று கொள்​வீர்​கள் என்று கேட்கிறார்கள்.

முதலில், இப்​போது வரலாற்​றுச் சிறப்​பு மிக்க புரட்சி நடந்​துள்​ளது. எனக்​கும், என் சகோ​தரிக்​கும், எங்​கள் குடும்​பத்​துடன் தொடர்புடைய அனை​வருக்​கும் கூடு​தல் பொறுப்​பும் பாரம்பரியத்தை காக்​கும் கடமை​யும் இருக்​கிறது. அதை பாதுகாப்​பது எங்​களின் பொறுப்​பு. அதனால், நாங்​கள் கவனமாகவும் பொறுப்​புட​னும் செயல்பட வேண்​டும். அப்படியான சூழல்​தான் தற்​போது நடக்​கிறது.

நான் எனக்​கென்று ஒரு தனி அடை​யாளத்​தை​யும், தனி பெயரையும் உரு​வாக்க வேண்​டும் என்று அப்பா விரும்​பி​னார். நானும் அதே எண்​ணத்​தில் இருந்​தேன். எங்​கள் இரு​வரின் சிந்தனை​யும் ஒரே மாதிரி​யாக இருந்​தது. ‘உனக்கு எந்த உதவி தேவைப்​பட்​டாலும் என்னை அணுகலாம். ஆனால், நீயே முயற்சி செய்ய வேண்​டும்’ என்று அப்பா கூறி​னார்.

வாழ்க்​கை​யில் வரும் அனுபவங்​களை நீயே சந்​தித்​து, அதிலிருந்து கற்​றுக்​கொள்ள வேண்​டும் என்​பதே அவரது விருப்​ப​ம். எனக்கு எப்போதும் துணை​யாக இருந்த அப்​பா, அம்மா மற்​றும் என் குடும்பத்​தினருக்கு நான் நன்​றி​யுள்​ளவ​னாக இருக்​கிறேன்” என்றார்.

அவரிடம் உங்​கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், ‘சிக்​மா’ படத்தை பார்த்​து​விட்டு ‘வாங்க ஹாலிவுட்​டில் ஒரு படம் பண்​ணலாம்’ என்று அழைத்​தால் இந்​தி​யா​விலிருந்து எந்த சிறந்த நடிகரை கூட்டி செல்​வீர்​கள் ? என்று கேட்​கப்​பட்​டது.

அதற்கு அவர், “எனக்கு முதலில் நினை​வுக்கு வரு​வது அப்பாதான். இரு​வரும் இணைந்​தால் அது அட்​ட​காச​மான கூட்​ட​ணி​யாக​வும் இருக்​கும். நான் இப்​போது தெரிவிக்​கும் இந்த கருத்தை நடிகர் ஜேசன் ஸ்டேதம் பார்க்க வேண்​டும் என்று நினைக்​கிறேன்” என்று பதில் அளித்​தார். அவருடைய பேட்டி சமூக வலை​தளத்​தில் வைரலாகி வருகிறது.

“அப்​பா​தான் என் முதல் சாய்ஸ்” - மனம் திறந்த ஜேசன் சஞ்​சய்
Chinna Chinna Aasai: என்று தணியும் லீலாக்களின் சுய தேடல்கள்?! | திரை தேவதைகள் 29

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in