எனக்​காக வந்​தவர் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 36

எனக்​காக வந்​தவர் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 36
Updated on
3 min read

எனக்கு திரைப்பட வாய்ப்​பு​கள் நல்​லபடி​யாக வந்து கொண்​டிருக்கின்ற நேரத்​தில், அதை மேலும் சிறப்​பாக்​கு​வதற்​காக, நாட்​டரசன் கோட்​டை​யில் இருந்து எனக்​காக வந்​தவர்​தான், இயக்​குநர் பேரரசு.

அவருடைய முதல் படமான ‘திருப்​பாச்​சி’​யில் நடிக்​கும் போது​தான் அவருடன் பழக்​கம் ஏற்​பட்​டது. காரைக்​குடி​யில் நடந்த படப்​பிடிப்​பில் அவரை நான் சந்​தித்​தேன். அந்​தப் படத்​தில் கல்​யாண தரக​ராக நடித்​திருப்​பேன். இன்​றைய முதல்​வர் விஜய்​யுடன் நடித்​தேன்.

முதலில் பார்த்த போதே நெடு​நாள் பழக்​க​மானவர் போல நெருக்​க​மாகி விட்​டார் பேரரசு அவர்​கள். நல்ல அரு​மை​யான காமெடி சென்ஸ் உள்​ளவர். படப்​பிடிப்​பில் அவர் அடிக்​கிற ஜோக்​கு​கள் அவ்​வளவு பிர​மாத​மாக இருக்​கும். படத்​தில் நடிக்​கிறவர்​களுக்கு மாடுலேஷனை அவர் அவ்​வளவு அரு​மை​யாக சொல்​லிக் கொடுப்​பார்.

காரைக்​குடி அரு​கில் உள்ள ஊர் ஒன்​றில் அப்​படத்​தின் படப்​பிடிப்பு நடை​பெற்ற போது, அரி​வாள் செய்​யக்​கூடிய​வர்​கள் எல்​லோரும் அங்கு வந்​தார்​கள். அரி​வாள்​களை எப்​படி உரு​வாக்​கு​கிறார்​கள் என்​ப​தையெல்​லாம் பார்த்​தேன்.

தனக்கு என்ன, எப்​படி வேண்​டும் என்​பதை நடிகர்​களிடம் தெளி​வாக விளக்​கு​வார் பேரரசு. வேலை வாங்​கு​வ​தி​லும், ரொம்ப கெட்​டிக்​காரர். ஒரு​வருக்கு இவர் சொல்​லிக் கொடுக்​கிற மாடுலேஷன் சரி​யாக வர வில்லை என்​றால், அவருக்கு என்ன வரு​கிறதோ அதை வைத்து படமாக்கி விட்டு டப்​பிங்​கில் சரி பண்​ணிக்​கொள்​ளலாம் என்ற நெளிவு சுளிவு தெரிந்த இயக்​குநர்.

‘திருப்​பாச்​சி’ படத்​துக்கு பிறகு அவர் இயக்​கிய ‘சிவ​காசி’ படத்​தி​லும் நடித்​தேன். தொடர்ந்து அவருடைய அனைத்து படங்​களி​லும் நடித்​திருக்​கிறேன். அவர் எப்​போது வேண்​டு​மா​னாலும் ஃபோன் பண்ணி படப்​பிடிப்​புக்கு அழைப்​பார்.

போவேன். இப்​போது சமீபத்​தில் கூட நான் அவரிடம் பேசினேன். இப்​படி ஒதுங்​கியே இருந்​தால் எப்​படி? நீங்​கள் சீக்​கிரமா படம் இயக்க வேண்​டும்” என்​றேன். சரி என்று கேட்​டுக் கொண்​டார்.

சமு​தா​யத்​தில் நடக்​கக்​கூடிய, சில விஷ​யங்​களுக்கு ஆதர​வாக​வும் சில விஷ​யங்​களை​கண்​டித்​தும் குரல் கொடுக்​கக்​கூடிய பொது நல சிந்​தனை உடைய​வர். அவருடைய தகப்​ப​னார், தாத்தா எல்​லோரும் அவர்​கள் ஊரில் பெரிய தலைக்​கட்டு மாதிரி. அம்​பலம் என்று சொல்​வார்​கள்.

அதைக் கேள்​விப்​பட்​டு, நான் அவரை அம்​பலம் என்​று​தான் கூப்​பிடு​வேன். அவருடைய தம்பி முத்து வடுகை சின்ன அம்​பலம் என்​பேன். இப்​போது கூட அவருடைய பெயரை பெரி​யம்​பலம் என்​று​தான் போனில் ‘சேவ்’ செய்து வைத்​திருக்​கிறேன்.

அவருடைய ‘சிவ​காசி’ படத்​தி​லும் விஜய் சார் ஹீரோ. அதில் நான், மறைந்த சிட்​டி​பாபு, பாடகர் ராம் என எல்​லோரும் நடித்​தோம். சரி​யாக 12.30 மணிக்​குக் கூப்​பிடு​வார். “இப்​போது உங்​களுக்கு ஷாட் இல்​லை.

வேற சில காட்​சிகள் எடுக்​கப் போகிறேன், நல்லா ரெஸ்ட் எடுத்​துட்டு 3.30-க்கு வாங்க” என்று முதலிலேயே சொல்லி விடு​வார். யாருக்கு எப்​போது ஷாட் என்​பதை சரி​யாக மனதில் வைத்​திருப்​பார். சிவ​காசி’க்கு பிறகு ‘திருப்​ப​தி’​யில் தம்பி அஜித் உடன் நடித்​தேன். அப்​புறம் பரத்​துடன் ‘பழனி’​யில் நடித்​தேன்.

அவருடைய இயக்​கத்​தில் வெளி​யான ‘தர்​மபுரி’ படத்​தில் விஜய​காந்த் அண்​ணாவுடன் நடித்​தேன். கதைப்​படி நான் அவர் வீட்​டில் வேலை பார்க்​கும் வேலைக்​காரன். ஆனால், அந்த கேரக்​டர் ஓனர் மாதிரி​யும், விஜய​காந்த் அண்​ணா, அவருக்கு சர்​வன்ட் மாதிரி​யும் வரும் என்று பேரரசு சொன்​ன​போது, “நல்லா இருக்கே பண்​ணலாமே” என்று விஜய​காந்த் அண்ணா சொல்​லி​யிருக்​கிறார்.

அவ்​வளவு பெரிய ஹீரோ, எனக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து என் பின்​னால் கையை கட்​டிக்​கிட்டு நிக்​க​வா? என்று கேட்​காமல், அவ்​வளவு பெருந்​தன்மையாக நடித்​தார். அதே போல, நல்ல கற்​பனை வளம் கொண்​ட​வர் இயக்​குநர் பேரரசு.

நல்ல பாடலாசிரியர், வசனகர்த்​தா, இசை அமைக்​க​வும் தெரி​யும் அவருக்​கு. அந்த அளவுக்கு சகல திறமை​களும் கொண்ட ஒரு​வர் அவர். “இந்த ஷாட்டை இப்​படி வச்​சுக்​கலாம், அந்த ஷாட்டை அப்​படி வச்​சுக்​கலாம்” என்று உடனே முடிவு பண்​ணு​வார்.

ஒரு நாள் காலை படப்​பிடிப்​பில் அவரும் நானும் உட்​கார்ந்து பேசிக்​கொண்​டிருக்​கும் போது யாரோ ஓர் அம்மா வந்​தார். என்​னிடம் வந்​து, “உங்​களை எனக்​குத் தெரி​யும்” என்று சொன்​னார். நான் யாருடைய அம்​மா​வாக​வாவது இருக்​குமோ? என்று நினைத்​து, “எப்​படிம்மா தெரி​யும்?” என்று கேட்​டேன்.

“நான்​தான் உங்​களை தின​மும் டிவி​யில பார்க்​கிறேனே” என்​றார். பேரரசு குபுக் என்று சிரித்​து​விட்​டார். நான் சொன்​னேன், “அம்​பலம், வேண்​டாம். என்னை வெறிப்​பேத்​துற மாதிரி நீங்க சிரிக்​கிறீங்க. உங்​களுக்​கும், இதே மாதிரி ஒரு இக்​கட்டு சீக்​கிரம் வரும்” என்​றேன்.

“அதெல்​லாம் எனக்கு ஒன்​றும் வராது. நான் ரொம்ப உஷா​ராக இருக்​கிறவன்” என்​றார். அந்த அம்மா போய்​விட்​டார். சிறிது நேரம் கழித்து வேற ஒரு​வர் வந்​தார். “சார், வணக்​கம். என்னை தெரி​யு​தா?” என்று கேட்​டார், பேரரசு​விடம்.

“இவ்​வளவு உரிமை​யாகக் கேட்​கிறாரே? எங்க பார்த்​திருப்​போம்?” என்று யோசித்​து​விட்​டு, “பார்த்​திருக்​கேன். நீங்க அவரோட பிரத​ரா? அந்த படத்​துல நீங்க ஒர்க் பண்​ணீங்​களா? அது​வா, இது​வா?” என்று என்​னென்​னவோ ஏழெட்டு கேள்வி கேட்​டார்.

ஒரு கட்​டத்​தில் “நீங்​களே சொல்​லுங்க” என்​றார் பேரரசு. அவர், “நீங்க கார்ல வந்து அந்த வளைவுல திரும்​பும் போது, நான்​தான் அந்த டீ கடை கிட்ட இருந்து உங்​களுக்கு டாட்டா காண்​பிச்​சேன்” என்​றார். நான் அப்​படியே திரும்பி அவரைப் பார்த்​தேன்.

“அண்​ணே, அப்​படி பார்க்​காதீங்க, நீங்க சொன்​னது உடனே பலிச்​சுப் போச்சு எனக்​கு” என்​றார். எங்​கள் இரு​வருக்​கும் எப்​போதுமே பாச​மான பிணைப்பு உண்​டு. அவருடைய அனைத்​துப் படங்​களி​லும் எனக்கு அரு​மை​யான கதா​பாத்​திரம் கொடுத்து விடு​வார்.

‘திஹார்’ படத்​துக்கு பிறகு அவர் படம் இயக்​க​வில்​லை. அவர் இப்​படி ஒதுங்கி இருப்​பது, எனக்கு மிகப்​பெரிய நஷ்ட​மாக நினைக்​கிறேன்​. அவர்​ படம்​ பண்​ணா​மல்​ இருப்​ப​தில்​ எனக்​கு வருத்​தம்​. அவர்​ சீக்​கிர​மாக படம்​ பண்​ண வேண்​டும்​, எனக்​கு நல்​ல க​தா​பாத்​திரம்​ கொடுக்​க வேண்​டும்​ என்​று இறைவனை வேண்​டு​கிறேன்​. பழைய வேகத்​துடன்​ சீக்​கிரம்​ ​வாங்​க அம்​பலம்​.

(திங்​கள்​ தோறும்​ பேசுவோம்​)

எனக்​காக வந்​தவர் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 36
‘மொழி’ தந்த விருது - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 35

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in