‘மீசைய முறுக்கு 2’ படத்தில் இசைக் கொண்டாட்டம்!

‘மீசைய முறுக்கு 2’ படத்தில் இசைக் கொண்டாட்டம்!
Updated on
1 min read

ஹிப் ஹாப் ஆதி, இயக்​கி, கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மீசைய முறுக்கு 2’. இதில், சைத்ரா ஆச்​சர், கேதிகா ஷர்​மா, ரம்யா ரங்​க​நாதன் ஆகியோர் கதா​நாயகி​களாக நடித்​துள்​ளனர். மேலும் ஹர்​ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடு​களம் நரேன், கருணாகரன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா சார்​பில் குஷ்பு சுந்​தர், ஏ.சி.எஸ். அருண்​கு​மார் தயாரித்​துள்ள இப்​படம் செப். 25-ல் வெளி​யாகிறது.

இப்படத்தில் இருந்து வெளி​யான ‘ஆரா 10/10’, ‘பப்​பாளிப் பழமே’, ‘கோ​யிந்​தம்​மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்​கள் ஏற்​கெனவே ரசிகர்​களின் கவனத்தை ஈர்த்​துள்ள நிலை​யில், தற்​போது படத்​தின் 5-வது பாடலான ‘கலை​வாணி​யே’ வெளி​யாகி​யுள்​ளது. இந்​தப் பாடலை கவுஷிக் கிருஷ்ணா, டி. சத்​யபிர​காஷ் மற்​றும் ஹிப்​ஹாப் தமிழா இணைந்து பாடி​யுள்​ளனர்.

“இந்​தப் படத்தில் இசைக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்கப் பட்டுள்ளது. இன்​றைய தலை​முறை​யினரின் ரசனைக்கு ஏற்ற வகை​யில் காதல், நட்​பு, நகைச்​சுவை, குடும்ப உணர்​வு​கள் மற்​றும் உற்​சாக​மான இசைக் கொண்டாட்டம் என அனைத்து அம்​சங்​களை​யும் கொண்ட பொழுது​போக்கு திரைப்​பட​மாக உரு​வாகி​யுள்​ளது” என்று படக்​குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர்​.

‘மீசைய முறுக்கு 2’ படத்தில் இசைக் கொண்டாட்டம்!
சிவராஜ்குமார் நடிக்கும் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in