

நடிகை ப்ரீத்தி அஸ்ராணி
‘மேயாதமான்’ ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘29’.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்குவாட் நிறுவனங்கள் சார்பில் கார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ளனர்.
“2000ம் ஆண்டில் நடக்கும் காதல் கதையான இது, அந்த காலக் கட்டத்து நினைவுகளையும் மனநிலையையும் அழகாகப் பிரதிபலிக்கும் விதத்தில் உருவாகியுள்ளது. இப்படம் மே 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை ‘தேஜாவு’, ‘வித்தைக்காரன்’ படங்களைத் தயாரித்த ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தமிழகத்தில் வெளியிடுகிறார்” என்றது படக்குழு.