‘கர’ மிகச் சிறந்த திரை அனுபவம்: மாரி செல்வராஜ் புகழாரம்

‘கர’ மிகச் சிறந்த திரை அனுபவம்: மாரி செல்வராஜ் புகழாரம்
Updated on
1 min read

‘கர’ திரைப்படம் மிக சிறந்த திரை அனுபவம் என்று மாரி செல்வராஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர’ திரைப்படம் நாளை (ஏப்ரல் 30) வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு சரியான விளம்பரப்படுத்துதல் இல்லை என்று இணையவாசிகள் குரல் எழுப்பி வருகிறார்கள். மேலும், படத்தின் டிக்கெட் முன்பதிவும் மிகவும் மந்தமாகவே உள்ளது. இதனிடையே, இப்படத்தினை மாரி செல்வராஜுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார்கள்.

‘கர’ குறித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளப் பதிவில், “இப்போது தான் “கர” பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது.

நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுஷ் சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது. அத்தோடு இப்படியான ஒரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் நன்றியும் அன்பும் …கர கொண்டாடப்படும்” என்று தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in