டிச.4-ல் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ரிலீஸ்

டிச.4-ல் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ரிலீஸ்
Updated on: 
1 min read

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, டப்பிங் கலைஞர் எனப் பல வகையில் பங்களித்து, பின்னர் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஆகியிருப்பவர் கே.மணிகண்டன்.

‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் படமான ‘மக்கள் காவலன்’ வரும் டிசம்பர் 4இல் வெளியாகிறது.

பிர்லா ஸ்டுடியோஸ் - நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி இயக்கியிருக்கிறார்.

படத்தில் இடம்பெற்றுள்ள 'இக்னோர்' என்கிற முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது 'இற இறகாக..' எனும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஜோதி கண்ணாவின் வரிகளில், நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ள இப்பாடல், நாயகன் தனது கடினமான உலகத்திலிருந்து விடுபட்டு, காதலியின் அன்பின் மூலம் எவ்வாறு நம்பிக்கையைப் பெறுகிறான் என்பதைச் சித்தரிக்கிறது. இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக திவ்யா ஸ்ரீபாதா அறிமுகமாகிறார்.

டிச.4-ல் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ரிலீஸ்
சதுர வடிவச் சூரியன்! - எவ்ரி டைம் (ஜெர்மனி) | உலகத் திரை 4

X