கவனம் ஈர்க்கும் 'இம்மார்ட்டல்' படத்தின் பாடல்!

கவனம் ஈர்க்கும் 'இம்மார்ட்டல்' படத்தின் பாடல்!
Updated on
1 min read

தமிழ்ப் பாடலாசிரியர்கள் காதலியை ‘அழகான ராட்சசி’ என்பதுவரை வர்ணித்துள்ளனர். அந்த வரிசையில் சாம் சி.எஸ். இசையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது ‘லவ் யூ.. லவ் யூ.. காட்டேரி’.

‘ஜிவி பிரகாஷ் - கயாடு லோஹர் ஜோடியின் நடிப்பில் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகிவரும் 'இம்மார்ட்டல்' படத்துக்காக ஷாலி.சி இப்பாடலை எழுதியிருக்கிறார்.

தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கிவரும் சாம்.சி.எஸ், ஏ.கே. பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகிவரும் இப்படத்துக்குக் கேட்டவுடன் மனதில் பதியும் மெல்லிசையாக, அதேநேரம் டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசையாகப் புதுமையான ஒலிகளைக் கோத்து இப்பாடலை உருவாக்கியிருக்கிறார்.

கவனம் ஈர்க்கும் 'இம்மார்ட்டல்' படத்தின் பாடல்!
சொல்லப்படாத காதலின் வலிமை! | ஆகாஷ் பாஸ்கரன் - இப்படிக்கு இயக்குநர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in